கொழும்பின்பிரபலஆண்கள்பாடசாலையில்மூன்றுமாணவர்கள்பாலியல்துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பு நான்கில் உள்ள பாடசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தரால் நான்கு மாணவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அதிபரின் கவனத்திற்கு கொண்டுவர முயன்ற இரண்டு ஆசிரியர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்,இதுவரையில் பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களை இதுவரை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தவில்லை,பாதுகாப்பு உத்தியோகத்தர் பாதுகாப்பு நிறுவனத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,என தெரிவித்துள்ள எதிர்கட்சி பெற்றோர் முறைப்பாடு செய்ய முயன்றவேளை சிறுவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டியிருக்கும்,வழக்குகள் பல வருடங்கள் நீடிக்கும் என மிரட்டியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
