தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸினை இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவினர் இன்று ஐந்து மணிநேரம் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதால் தமிழ்தேசிய மக்கள் முன்னணி விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயல்கின்றதா என்ற அடிப்படையிலேயே விசாரணைகள் இடம்பெற்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸினை இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவினர் இன்று ஐந்து மணிநேரம் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதால் தமிழ்தேசிய மக்கள் முன்னணி விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயல்கின்றதா என்ற அடிப்படையிலேயே விசாரணைகள்
சுரேஷ் சிங்கள பௌத்த தேசியவாதக் கதைக்களத்தை சவாலுக்குட்படுத்தும் அரசியல் கருத்துக்களைப் பேணுவதற்காக துன்புறுத்தப்படுகின்ற பல தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒருவராக உள்ளார்.
இத்தகைய சூழலில் “அமைப்புமாற்றம்” எனப்படும் கோஷம் வெறும் பாசாங்காகவே தெரிகிறது! ” தேசிய மக்கள் சக்தி அதன் முன்னோடிகளை போல பழுதடைந்துவிட்டது.
