ஞானசார தேரரை துறவற ஆடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் – நீதிமன்றத்தில் மனு

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபல சேனாவின் ஞானசார தேரரை துறவற ஆடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் என கோரும் மனுவொன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கலாநிதி பிஏ இரத்தினபால என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதி தீர்மானம் எட்டப்படும்வரை ஞானசாரதேரரை சாதாரண உடையிலோ அல்லது சிறை ஆடையிலோ விலங்கிடப்பட்ட நிலையிலோ ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஆஜர்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் சிறைச்சாலை விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஞானசாரதேரரை புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதற்கும் அவற்றை பரப்புவதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும் தடை விதிக்கவேண்டும் என அவர் அந்த மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

court-judge-hammer-gavel-696x398
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம்- சட்டமா அதிபர்
karu11
செவிமடுப்பதே நீதியான சட்டம் ஒன்றை நோக்கிய முதல் படியாகும்
drones
அனுமதியின்றி ட்ரோன்களை இறக்குமதி செய்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார- குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை
srilankan air
கடுமையான நிதி நெருக்கச்சியை எதிர்கொண்டுள்ளஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
indra11
'இப்போது நான் காரில் இருக்கிறேன், அவருக்கு  எதிரே அமர்ந்துள்ளேன். அவரது சேலையில் இரத்தம், அவரது  நெஞ்சில் இரத்தம்': தனது மாமியார் இந்திரா  காந்திபடுகொலையை நினைவு கூரும் சோனியா காந்தி
Alii_sabir_1200px_02_08_2024
மக்களின் குரல்களுக்குச் செவிமடுப்பது பலவீனமல்ல; அதுவே ஜனநாயக நிர்வாகத்தின் பலமாகும்.-அலி சப்ரி
prageeth1111111111111111
பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த நீதிமன்ற விசாரணைகள் - தற்போதைய நிலை என்ன?
Suresh-Sallay
சுரேஷ் சாலே ஆசாத் மௌலானா சந்திப்பு இடம்பெற்ற ஹோட்டல் - விசாரணைகள் தீவிரம்
velan1
சோமதேவவின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்- சர்வதேச விசாரணை தேவை-17ம் திகதி செம்மணியில் போராட்டம் - வேலன்சுவாமிகள்
bec5d639-8910-46b7-8d9c-44bb88e4bce9
போலந்தின் கிராக்கோவ் நகரில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - ஐவர் பலி