ஞானசார தேரருக்குக் காவி உடை வழங்குவதற்கு வசதி செய்யுமாறு மகாநாயக்க தேரர் கோரிக்கை

ஞானசார தேரருக்குக் காவி உடை வழங்குவதற்கு வசதி செய்யுமாறு மகாநாயக்க தேரர் கோரிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் மீண்டும் தனது காவி உடைகளை (பிச்சாடைகளை) அணிவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு சியாம் மகா நிகாயவின் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் தலைமைப் பீடாதிபதி வணக்கத்திற்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த நடைமுறையானது பௌத்த கோட்பாடுகள் மற்றும் துறவற ஒழுக்க விதிகளுக்கு  அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என மகாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தேவையான மதச் சடங்குகளை நடத்துவதற்கு விரைவில் ஒரு திகதியையும் நேரத்தையும் ஒதுக்கித் தருமாறு அவர் கோரியுள்ளார்.

மேலும், இந்த நோக்கத்திற்காகத் தாமும் உட்பட சங்க சபையின் பத்து பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாகக் மகாநாயக்க தேரர் சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

அக்குழுவின் விஜயத்திற்கான தேவையான ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்து தருமாறும், அது குறித்துத் தனக்கு அறிவிக்குமாறும் அவர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Rambewa-accident-5
ரம்பேவ பேருந்து விபத்து -மூன்று ஆண்கள் உட்பட நால்வர் பலி – 76பேர் மருத்துவமனைகளில் - பலருக்கு எலும்பு முறிவு தலைக்காயங்கள்
nishantha
தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் நிசாந்த ரணதுங்க கைது – அரசநிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு
899353484_1134206172333435_4712077817965227141_n
மாமனிதர் நடராஜா ரவிராஜின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில்
matala mass 1
மாத்தளை மனித புதைகுழி விசாரணை 11ம் திகதி-காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் நீதிமன்றத்தின் முன்பாக ஒன்றுகூடவுள்ள உறவுகள்
ajith dhar house
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பல விடயங்களை அம்பலப்படுத்திய பொலிஸ் அதிகாரியின் வீட்டின் மீது தாக்குதல்
gajendra
சட்டவிரோத தையிட்டி விகாரையில் மத நிகழ்வுகளை அநுர அரசாங்கம் ஊக்குவிக்கிறது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு
sonia-gandhi-rahul-gandhi-cwc-pti-_625x300_10_August_19
அப்பாவின் பாதுகாப்பிற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு  நான் வர வேண்டியிருக்கும்": ராகுலின் எச்சரிக்கையை நினைவுகூர்ந்தார் சோனியா காந்தி
no psta
"மக்கள்செல்வாக்குச் சர்வாதிகாரத்தை நோக்கிய இலங்கையின் நகர்வு
Anuradhapura-accident
விபத்தில் சிக்கியது யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து – ஐவர் பலி
psta no15
புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலத்தில் திருத்தங்கள் அவசியம் - படையினருக்கு கைதுசெய்வதற்கான அதிகாரத்தை வழங்ககூடாது – ஐநா நிபுணர்கள் வேண்டுகோள்