காவன்திஸ்ஸ தந்த யானையின் வயிற்றுப் பகுதியில் இருந்து மூன்று துப்பாக்கிச் சன்னச் சிதறல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, மஹவ நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்காலப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த யானை சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு மஹவ நீதவான் அனுருத்திகா செனவிரத்ன உத்தரவிட்டுள்ளார்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்த நீதவான், அடுத்த வழக்குத் தவணையின் போது பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சாட்சியங்களை முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
இதற்கமைய, சந்தேகநபர்கள் எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடைக்காலப் பிரேதப் பரிசோதனை அறிக்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பி.பி.எம்.ஏ. விஜேசுந்தரவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது