பதிவு செய்யாமல் இயங்கும் மருந்தகங்களிற்கு எதிராக இந்த மாத இறுதிக்கு பின்னர் சட்டநடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பதிவு செய்யாமல் இயங்கும் மருந்தகங்கள் இந்த மாத இறுதிக்குள் தங்களை இணையம் மூலம் பதிவு செய்வதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளதாக இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை கால அவகாசம் முடிவடைந்ததும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது
ஒரு மருந்தகம் தேவையான தொழில்முறை சான்றுகளைக் கொண்ட ஒரு தகுதிவாய்ந்த மருந்தாளரைப் பணியமர்த்தினால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என தேசிய மருந்துகள் ஓழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர்வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார். “அத்தகைய மருந்தாளர் இருக்கும்போது மட்டுமே நாங்கள் மருந்தகங்களை பதிவு செய்கிறோம். ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட மருந்தகமும் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும்.”என அவர் குறிப்பிட்டுள்ளார்
பல மருந்தகங்கள் இன்னும் பதிவு செய்யாமலேயே செயல்பட்டு வருவதாகவும் ஒரு வலைத்தளம் மூலம் பதிவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளித்துள்ளதாகவும் இந்த மாத இறுதி வரை அவர்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்வதற்கான பொருத்தமான சமர்ப்பிப்புகளைச் செய்யலாம். அவர்கள் இணங்கவில்லை என்றால் பதிவு செய்யப்படாத மருந்தகங்களை மூடுவதற்கு நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்என அவர் குறிப்பிட்டுள்ளா
