“காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் கண்ணீரை துடைப்பேன் என தேர்தலிற்கு முன்னர் வாக்குறுதியளித்தீர்கள் ஆனால் கொல்லப்பட்ட எங்கள் பிள்ளைகள் உறவினர்களை மறப்பதற்கு முயல்கின்றீர்கள்’– ஜேவிபி கிளர்ச்சியின் போது காணாமலாக்கப்பட்டவர்கள் அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்

ஜேவிபி கிளர்ச்சியின் போது காணாமலாக்கப்பட்டவர்கள் அமைப்பான காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் அமைப்பு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் மௌனம் குறித்து ஆழ்ந்த ஏமாற்றம் வெளியிட்டுள்ளது
காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் அமைப்பின் 37 வருடாந்த மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில்ஒக்டோபர் 13ம் திகதியும் 21ம் திகதியும் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ அழைப்பை அனுப்பியபோதிலும் 37வருட நிகழ்வில் கலந்துகொள்வது குறித்தோ காணாமல்போனவர்களின் உறவுகளை சந்திப்பது குறித்தோ ஜனாதிபதியிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை என அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
27ம் திகதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக உங்களிற்கு அனுப்பிய அழைப்பில் இந்த நிகழ்வில் கலந்துகொள்வது குறித்து உறுதிப்படுத்துமாறும் இல்லாவிட்டால் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களைஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பதற்கான திகதியொன்றை தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என பிரிட்டோ பெர்ணாண்டோ ஜனாதிபதிக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


நீங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வது அல்லது பிறிதொரு திகதியில் எங்களை சந்திப்பது குறி;த்து 20ம் திகதிக்கு முதல் எழுத்து மூலம்தெரிவிக்குமாறு சகோதரத்துடன் நாங்கள் வேண்டுகோள் விடுத்தபோதிலும் உங்கள் பணியாளர்கள் எழுத்து மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமோ பதிலை வழங்காததும் எங்களின் கடிதம் கிடைத்தது என அறிவிக்காததும்எந்த பதிலையும் வழங்காதது ஆழ்ந்த ஏமாற்றத்திற்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நீங்கள் நிகழ்வில் கலந்துகொள்வீர்களா அல்லது மற்றுமொரு திகதியில் எங்களை சந்திப்பீர்களா என்ற எழுத்து மூல பதிலை 24ம் திகதிக்கு முன்னர் எதிர்பார்க்கின்றோம் என பிரிட்டோ பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் கண்ணீரை துடைப்பேன் என தேர்தலிற்கு முன்னர் வாக்குறுதியளித்தீர்கள் ஆனால் தொடர்ச்சியான மௌனம் விரக்தியையும் சீற்றத்துடனான வேதனையையும் உருவாக்கியுள்ளது என பிரிட்டோ பெர்ணாண்டோ ஜனாதிபதிக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நீPங்கள் கிளர்ச்சியின் போது உயிர்தப்பினீர்கள் என தெரிவித்திருந்தீர்கள் ஆனால் எங்களிற்கு பதிலளி;க்காததன் மூலமும் உங்களை சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்காததன் மூலமும் உங்களை போல அதிஸ்டசாலி இல்லாத உயிர்பிழைக்காத எங்களின் மகன்கள் உறவினர்களை நீங்கள் மறக்க முயல்கின்றீர்கள் என தெரிவித்துள்ளார்.
ஒரு மணிநேரம் இடம்பெறவுள்ள நிகழ்வின் பின்னர் நீதியமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெறும்
200இ000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களிற்கு வரவு செலவு திட்டத்தில் 5000 ரூபாய் ஒதுக்கீடு மற்றும் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களை நேரில் சந்திப்பது குறித்த ஜனாதிபதியின் உத்தரவாத கடிதம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து