நான்கு வருடங்களிற்கு பின்னர் குவைத் எயர்வேய்ஸ் இலங்கைக்கான தனது சேவையை மீண்டும் நாளை 27ம் திகதி ஆரம்பிக்கின்றது.
குவைத்ஏர்வேஸ் குவைத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் வாராந்தம் நான்கு தடவை பயணிக்கும்.
இறுதியாக இலங்கைக்கான குவைத் ஏர்வேஸின் சேவை 2021 இல் இடம்பெற்றது.
குவைத்எயர்வேய்ஸ் மீண்டும் தனது சேவையை ஆரம்பிப்பது மத்திய கிழக்கிற்கும் இலங்கைக்கும் இடையிலான வான்தொடர்பினை வலுப்படுத்துவது குறித்த அதன் அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துகின்றது.
இந்தப் பாதை A320neo, விமானத்தைப் பயன்படுத்தி இயக்கப்படும் இது நான்கரை மணி நேர பயணத்தில் பயணிகளுக்கு மேம்பட்ட ஆறுதல் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகிறது
