எதிர்வரும் பண்டிகை காலத்தை கையாள்வதற்கான உரிய விசேட திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தவேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
பண்டிகை காலத்தில் அரிசி பருப்பு சீனி மரக்கறி மா போன்றவற்றின் விலைகள் தளம்பல் இன்றி சீரானதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது ஏற்கனவே விலைகள் அதிகரித்துவிட்டன ஆனால் வர்த்தக உணவுபாதுகாப்பு அமைச்சிடம் பண்டிகை காலத்திற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என நினைக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பரின் பிற்பகுதியில் ஆரம்பமாகி ஜனவரி வரை நீடிக்கும் பண்டிகை காலத்தில் கிறிஸ்மஸ் புதுவருடத்திற்கு மக்கள் தயாராவதால் வழமையாகவே நுகர்வோர் தாங்கள் செலவிடும் பணத்தை அதிகரிப்பது வழமை.
இந்த காலப்பகுதியில் வழமையாக உணவு வீட்டுபாவனை பொருட்கள் ஆடைகள் போன்றவற்றிற்கான தேவை அதிகரிக்கும் இதன் காரணமாக உள்ளுர் சந்தைகளில் விலைகளில் நிச்சயமற்ற நிலை காணப்படும்.
கடந்த சில வருடங்களாக நுகர்வோர் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலைகளில் பெரும் அதிகரிப்பை எதிர்நோக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வர்த்தகர்கள் இதற்கு பல காரணங்களை கூறினாலும்,பொருட்களின் விலைகள் செயற்கையாக அதிகரிப்பதை தடுப்பதற்கு அரசாங்கம் உறுதியான விதத்தில் தலையிடவேண்டும் என நுகர்வோர் அமைப்புகள் வேண்டுகோள் விடு;த்துவந்துள்ளன.
