இலங்கையில் தற்போது 380 வகையான மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது இதில் மிக அத்தியாவசிய மருந்துகளும் உள்ளன என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளும் கடந்த நான்கு மாதங்களாக இரத்தப்பரிசோதனையை மேற்கொள்வதை நிறுத்திவிட்டன அவர் குறிப்பிட்டுள்ளார்
அவர்கள் ஆய்வுகூடங்கள் மூலமே அவற்றை மேற்கொள்கின்றனர் இரத்தப்பரிசோதனையை வெளியேயே மேற்கொள்கின்றனர்,எனது பதவிக்காலத்தின் போது நான் இதற்கு தடை விதித்திருந்தேன்,அன்று மருத்துவமனையிலேயே இலவசமாக செய்தோம் இன்று பணத்திற்காக செய்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சத்திரசிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளிடம் பெரிய பட்டியலை கையளிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் பைபாஸ் சத்திரசிகிச்சை செய்யவிருந்த நோயாளிக்கு 50,000 ரூபாய்க்கான பட்டியலை கையளித்தனர் என ஒரு நோயாளி சமீபத்தில் என்னிடம் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.
