இலங்கையை சேர்ந்த சிரேஸ்ட பௌத்தமதகுரு ஒருவர் அவுஸ்திரேலியாவில் ஆறுசிறுமிகளை பாலியல்வன்முறைக்குட்படுத்தினார் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கீஸ்பரோவில் உள்ள தம்மசரண ஆலயத்தின் தலைமை மதகுரு நாவோதுன்ன விஜித 1984 முதல் 2002 ம் ஆண்டிற்கு இடையில் இந்த குற்றங்களை புரிந்தார் என மெல்பேர்ன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பு வாசிக்கப்பட்டவேளை குறிப்பிட்ட பௌத்த மததுறவி காவி உடையில் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார் எனினும் அவர் எந்த உணர்வையும் முகத்தில் வெளிப்படுத்தாதவராக காணப்பட்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகளின் போது பௌத்த மதகுருவிற்கு ஆதரவாக தொடர்ந்து நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த பௌத்த ஆலய அதிகாரிகள் கண்ணீர்விட்டழுதனர்.
விக்டோரியா சட்டத்தின் கீழ் பௌத்த மதகுருவிற்கு ஒரு தசாப்தகாலத்திற்கு மேல் சிறைத்தண்டனைகளை வழங்கலாம்.
30 வயது மதிக்கத்தக்க ஆறுபெண்கள் பௌத்த மதகுருவிற்கு எதிராக சாட்சியமளித்திருந்தனர்.
70 வயதான துறவி மீது 16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எட்டு குற்றச்சாட்டுகளும் 1 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் ஆபாசமான செயலைச் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
