மன்னாரில் தற்போது அனுமதிவழங்கப்பட்ட காற்றாலை மின்திட்டங்களை தவிர வேறு காற்றாலை மின்திட்டங்களிற்கு அனுமதிவழங்குவதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மன்னார் மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கரிசனைகளை வெளியிட்டுள்ள நிலையிலேயே அமைச்சரவை இவ்வாறு தீர்மானித்துள்ளது.
மன்னார் தீவில் மூன்று காற்றாலை மின்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்ததாகவும்,இவற்றை டிசம்பர் 2025 டிசம்பர் மற்றும் 2026 டிசம்பரிற்குள் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அமைச்சரவை பத்திரம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மக்களின் விருப்பம் இன்றி வேறு காற்றாலை மின்திட்டங்களிற்கு அனுமதியளிக்கவேண்டாம் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.
