தொழில்முனைவோருக்கு என உலக வங்கியினால் வழங்கப்பட்ட நிதியை பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் விபரங்களை அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
பச்சை மற்றும் நீல கட்சிகளின் ஆட்சிகளின் போது இது நிகழ்ந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கமாக கொண்டு விவசாயதுறை சார்ந்த தொழில்துறைகளில் ஈடுபடும் தொழில்முனைவோருக்கு என உலக வங்கி ஒரு தொகை நிதியை ஒதுக்கியது என தெரிவித்துள்ள அவர் இந்த நிதியை பயன்படுத்திய அரசியல்வாதிகள் தனிநபர்கள் நிறுவனங்களின் பட்டியல் மிகவும் நீளமானது இதில் சிலரின் பெயர் விபரங்களை நான் வெளியிடுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் தயா கமகேயின் மனைவி அனோமா கமகேயுடன் தொடர்புடைய நிறுவனம் உலகவங்கியின் நிதியில் 14.95 மில்லியனை பெற்றுக்கொண்டுள்ளது ஆனால் அவ்வாறான எந்த நிறுவனமும் இல்லை திருப்பி செலுத்தவுமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தயாகமகேயின் செயலாளர் பந்துல விக்கிரமராச்சி 8.2 மில்லியனை பெற்றுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரொசான்ரணசிங்கவின் மனைவியின் அசானி கொன்ஸ்டிரக்சன் உலக வங்கியின் நிதியில் 18 மில்லியனை பெற்றுள்ளது முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரனாகொட 18 மில்லியனை பெற்றுள்ளார்.
