நேபாளத்தை சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணியிடமிருந்து பயணகட்டணமாக பெருமளவு பணத்தை பெற்ற முச்சக்கரவண்டி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்
குறுகிய தூரப்பயணத்திற்காக 30,000 ரூபாயினை பெற்ற முச்சக்கரவண்டி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் 25ம் திகதி இந்த சம்பவம் குறித்து சுற்றுலா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வாகனம் மற்றும் சாரதி குறித்து தெரிவிக்கப்பட்ட விபரங்களை அடிப்படையாக வைத்து சந்தேகநபரை கைதுசெய்யதனர்.
மோட்டார் சைக்கிள் பேரணியொன்றின் போது அடையாளம் காணப்பட்ட இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடம் முச்சக்கரவண்டி சாரதிகள் அளவுகதிகமான கட்டணத்தை அறவிடுவது குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.
சமீபத்தில் பிரேசில் மற்றும் பெல்ஜியம் பெண்களிடம் பயண கட்டணமாக 10,000 மற்றும் 30,000 பெற்றுக்கொண்ட இரண்டு முச்சக்கரவண்டி சாரதிகள் கைதுசெய்யப்பட்டனர்.