பாக்கிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தினை தொடர்ந்து பாக்கிஸ்தான் இலங்கை கிரிக்கெட் தொடர் நிச்சயமற்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இரண்டு அணிகளிற்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து 17 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ராவல்பிண்டியில் இடம்பெற்றது.
இலங்கை அணியினர் கடும் பாதுகாப்பின் மத்தியில் மைதானத்திற்குள் அழைத்துச்செல்லப்பட்டனர்.
எனினும் இலங்கை வீரர்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் தொடர்ந்தும் பாக்கிஸ்தானில் விளையாடுவது குறித்து கவலை வெளியிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இலங்கை அணியை தொடர்ந்து விளையாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை வீரர்களிற்கு அதிகூடிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்தாலும் இலங்கை வீரர்கள் கவலையுடன் காணப்படுகின்றனர்.
