ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் சமர்ப்பித்த வரவுசெலவுதிட்டத்தை ஆராய்ந்து வருவதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் தொடர்பாடல் இயக்குநர் ஜூலி கொசாக் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியம் வரவுசெலவுதிட்டத்தை ஆராய்ந்துவருகின்றது எதிர்வரும் வாரங்களில் ஈஎவ்எவ் இன் கீழ் இலங்கையின் ஐந்தாவது மதிப்பாய்வை பரிசீலிக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் அதன் அடிப்படையில் 347 மில்லியன் டொலரை விடுவிப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்..
இலங்கையுடன் ஒன்பதாம் திகதி எட்டப்பட்ட உடன்படிக்கை சபையின் பரிசீலனைக்கு வழிவகுக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மதிப்பாய்வை சபை அங்கீகரித்ததும்இலங்கை 347 மில்லியன் டொலரை பெறமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈஎவ்எவ்திட்டத்தின் கீழ் உள்ள உறுதிமொழிகளுடன் நிதி கட்டமைப்பு ஒத்துப்போகிறதா என்பதை சர்வதேசநாணயம் மதிப்பிடுகிறது. “இந்த மதிப்பீடும்சபையால் மதிப்பிடப்படும் முக்கியமாக இது காணப்படும் எனஅவர் தெரிவித்துள்ளார்
இலங்கையின் வளர்ச்சிக் கண்ணோட்டத்தை வலுப்படுத்த கட்டமைப்பு மாற்றங்கள் இன்றியமையாததாக உள்ளன. வர்த்தக தாராளமயமாக்கலில் முன்னேற்றம் வெளிநாட்டு நேரடி முதலீட்டைச் சுற்றியுள்ள ஒழுங்குமுறை துரிதப்படுத்தப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் வலுவான சமூகப் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை தொடர்ச்சியான கவனம் தேவைப்படும் முக்கிய பகுதிகளாககாணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்
பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதைத் தொடர்ந்து முன்னுரிமையாகக் கொண்டிருக்க வேண்டும்என அவர் தெரிவித்துள்ளார்
