ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்சவின் சட்டக்கல்வி தகுதி குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிச கேள்வி எழுப்பியுள்ளார்.
புலனாய்வு அறிக்கையிடல் ஒன்றை அடிப்படையாக வைத்தே அவர் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
சிட்டி யூனிவெர்சிட்எடி ஒவ் இலண்டனிலிருந்து நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்ட சட்ட பட்டத்தையும்அதனை தொடர்ந்துஅது இலங்கை சட்டக்கல்லூhயில் சேருவதற்கும்ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் முதுகலைபட்டப்படிப்பிற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள ஊடகவியலாளர் நிர்மலா கன்னங்கரா இதில் பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15 2009 அன்று வழங்கப்பட்ட ஒரு சான்றிதழில் 54 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்த துணைவேந்தர் ஒருவர் கையொப்பமிட்டதாகக் கூறப்படுகிறது இது அதன் செல்லுபடியாகும் தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பியது.என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லண்டன் நகரப் பல்கலைக்கழகம் சட்டக் கல்லூரியால் அக்டோபர் 15 2009 அன்று மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட போதிலும் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு செப்டம்பர் 25 2009 அன்று விண்ணப்பித்தார்என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாமலின் சட்டப் பட்டத்தின் மர்மம்” மற்றும் “நாமலின் சட்டக் கல்லூரி கோப்பு சேர்க்கையில் பட்டச் சான்றிதழ் இல்லை” என்ற தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ள இந்த வெளிப்பாடுகள் கவலையைத் தூண்டியுள்ளதாக
அமைச்சர் தெரிவித்துள்ளார்
“சபை மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க” இந்த விஷயத்தை தெளிவுபடுத்த மதிய உணவுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில்நாமல் ஆஜராக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்