கண்டியின் அன்கும்பர பகுதியில் பாரியமண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
தொடரும் மோசமான காலநிலை மற்றும் மேலும் மண்சரிவு ஆபத்து காரணமாக மீட்பு குழுவினர் அந்த இடத்திற்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.
இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இல்லை என தெரிவித்துள்ள பொலிஸார் நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளதுடன் பொதுமக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையாகயிருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.