ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொஸ்கோவில் எலெட்ஸ்காயா ) வீதியில் பொலிஸ் வாகனத்திற்கு அருகில் “சந்தேகத்திற்கிடமான நபர்” ஒருவரை இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் கண்டுள்ளனர். அவர்கள் அந்தச் சந்தேக நபரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்காக அவரை நெருங்கிய போது வெடிபொருள் ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டதாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அருகில் நின்றிருந்த மற்றொரு நபரும் உயிரிழந்தனர்.
கடந்த திங்கட்கிழமை மாஸ்கோ தலைநகரில் கார் குண்டுவெடிப்பில் சிரேஷ்ட ரஷ்ய ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காரின் அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் உயிரிழந்திருந்தார்.
“போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் உயிரைப் பறிக்க முயன்றது தொடர்பாக” மாஸ்கோவில் குற்றவியல் வழக்கு ஒன்று விசாரிக்கப்பட்டு வருவதாக புலனாய்வுக் குழுவின் ஊடகப் பேச்சாளர் ஸ்வெட்லானா பெட்ரென்கோ டெலிகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.