சிவப்பு எச்சரிக்கைகள் நீக்கப்பட்ட போதிலும், பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் இன்னும் நீடிப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எச்சரித்துள்ளது.
மழைவீழ்ச்சி குறைந்ததையடுத்து எச்சரிக்கைகள் மீளப் பெறப்பட்டதாக சிரேஷ்ட விஞ்ஞானி ஹசாலி சேமசிங்க தெரிவித்தார்.
இருப்பினும், அபாயம் இன்னும் முழுமையாக குறையவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதிக அபாயமுள்ள இடங்களுக்கு பொதுமக்கள் மீண்டும் செல்ல வேண்டாம் என வலியுறுத்தினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுகளை முடித்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் பாதுகாப்பானவை என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருக்குமாறு குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
