போலந்திலிருந்து இலங்கைக்கான குளிர்காலத்தின் முதலாவது விமானம் பி.ஐ.ஏ (BIA) இல் தரையிறங்கியது

குளிர்காலத்தை முன்னிட்டு போலந்திலிருந்து இலங்கைக்கான முதலாவது விமானம் நேற்றிரவு (23) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கியது.

‘ஸ்மார்ட் விங்ஸ்’ (Smart Wings) ஏர்லைன்ஸ் நிறுவனத்தினால் இயக்கப்படும் இந்த விமானம், போலந்தின் வார்சா நகலிலிருந்து புறப்பட்டு இரவு 10:10 மணியளவில் பி.ஐ.ஏ விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த ஆரம்பகட்ட விமானப் பயணத்திற்காக போயிங் 737 ரக விமானம் பயன்படுத்தப்பட்டதுடன், இதில் 180 பயணிகள் மற்றும் 9 பணியாளர்கள் வருகை தந்திருந்தனர்.

இதற்கமைய, போலந்து ஸ்மார்ட் விங்ஸ் விமானங்கள் மார்ச் 15, 2026 வரை வார்சாவிலிருந்து கொழும்புக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படவுள்ளன.

இந்த விமானங்களின் மூலம் வருகை தரும் பயணிகள் இலங்கையின் கடலோரப் பகுதிகள், சிகிரியா, தம்புள்ளை, கண்டி, நுவரெலியா மற்றும் யால உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகை தந்த போலந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்