குறைவடைகின்றது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்த ஆர்வம் – அரசியல்வாதிகளே காரணம் என கருத்து

கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் மற்றும் தவறான நிர்வாகமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடுபவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறையக் காரணம் என்று உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கங்களின் சங்கம் (ALFEA) நேற்று தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடியான நடைமுறைகளால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் “மங்கலாகி” விட்டதாகவும், இதனால் வேலை தேடுபவர்கள் ஊக்கமிழந்துள்ளதாகவும் ALFEA உறுப்பினர் முகமது ஆசம் தெரிவித்தார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது.

இந்த வீழ்ச்சியானது, மத்திய கிழக்கு நாடுகள் போன்ற இடங்களுக்கு பணியாளர்களை அனுப்புவதில் குறிப்பிடத்தக்க குறைவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடைமுறைகளை முறைப்படுத்த அடுத்த ஆண்டு அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற சங்கம் திட்டமிட்டுள்ளது.

“முறையான ஒழுங்குமுறை மற்றும் அரசாங்க ஆதரவுடன், அடுத்த ஆண்டு வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் (Remittances) சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என ஆசம் கூறினார்.

இதற்கிடையில், இந்த ஆண்டில் இதுவரை 300,000-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. இதில் 184,085 ஆண்களும், 116,106 பெண்களும் அடங்குவர்.

சுமார் 194,982 தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து புலம்பெயர்ந்துள்ள அதேவேளை, 105,209 பேர் உரிமம் பெற்ற முகவர் நிலையங்கள் ஊடாக வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் தொழிலாளர் பணப்பரிமாற்றம் மூலம் இலங்கை 7.19 பில்லியன் அமெரிக்கடொலர்களை ஈட்டியுள்ளதாக SLBFE மேலும் தெரிவித்துள்ளது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்