பாலஸ்தீனிய தன்னார்வலர்கள் நத்தார் தாத்தா (Santa Claus) உடைகளை அணிந்து, வடக்கு காசாவிலுள்ள ஜபாலியா (Jabalia) சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலம் வந்தனர். முற்றுகையிடப்பட்ட இந்த நிலப்பரப்பில் இஸ்ரேலின் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான தருணங்களை வழங்குவதற்காக அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டனர்.
இடிபாடுகளுக்கு மத்தியில் வாழும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்கும் முயற்சியாக, தன்னார்வலர்கள் குழந்தைகளுடன் விளையாடினர், இசை நிகழ்ச்சிகளை நடத்தினர் மற்றும் சில பரிசுகளை விநியோகித்தனர்.

முற்றுகையிடப்பட்ட அந்த நிலப்பரப்பின் ஏனைய பகுதிகளைப் போலவே, வடக்கு காசாவிலுள்ள ஜபாலியாவின் தெருக்களும் இடிபாடுகளாகக் காட்சிளிக்கின்றன.
