மருத்துவமனைக்கான கட்டணங்களை செலுத்த முடியாத நிலை -கடவுச்சீட்டு பறிமுதல் – துபாயில் சிக்குண்டுள்ள இலங்கை பெண் முகநூல் மூலம் மன்றாட்டம்

துபாயில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கியிருக்கும் ஒரு பெண்ணும் அவரது குழந்தையும், உதவி கோரி சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்து, இது குறித்து முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.

தன்னை மீண்டும் நாட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சரிடம் அந்தப் பெண் பேஸ்புக் (Facebook) மூலம் நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அந்தப் பெண் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மாரடைப்பு காரணமாக நீண்ட காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது கணவர் உயிரிழந்ததையடுத்து, என்னால் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற முடியவில்லை. செலுத்தப்படாத மருத்துவக் கட்டணங்கள் காரணமாக, துபாய் மருத்துவமனை ஒன்று எனது கடவுச்சீட்டை (Passport) சுமார் மூன்று ஆண்டுகளாகத் தடுத்து வைத்துள்ளது. இதனால் எனக்கும் எனது குழந்தைக்கும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் போய்விட்டன.”

மேலும், தனது பெயரில் பெறப்பட்ட தங்குமிடத்திற்கான வாடகைக் காசோலைகளை (Post-dated checks) தன்னால் தற்போது செலுத்த முடியாததால், சட்ட ரீதியான மற்றும் நிதி ரீதியான சிக்கல்களையும் எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது எனக்கு சட்ட ரீதியான பிரச்சினைகளும் உள்ளன, ஏனெனில் எனது பெயரில் தங்குமிடத்தைப் பெற்றிருந்தேன்… அந்தப் பணத்தைச் செலுத்த என்னிடம் வழியில்லை. இப்போதும் என்னிடம் தீர்வு எதுவுமில்லை… அத்துடன் எனக்கும் எனது குழந்தைக்கும் செல்லுபடியாகும் விசாக்கள் இல்லை, அதனால் எங்கும் வேலை பெறவும் முடியவில்லை” என்று அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தான் அரசாங்கத்திடம் நிதி இழப்பீடு எதையும் கோரவில்லை என்றும், தனது தாய்நாட்டிற்குத் திரும்புவதற்குத் தேவையான உதவியை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, தான் அந்தப் பெண்ணுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், அவர் தற்போது இலங்கைத் தூதரகத்தில் முறையான வாக்குமூலத்தை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“எனது அலுவலகம், அபுதாபியில் உள்ள எமது தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து இந்தப் பிரச்சினையைக் கையாண்டு வருகிறது. முறையான அதிகாரப்பூர்வ வழிமுறைகள் மூலம் அவரையும் குழந்தையையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று பிரதி அமைச்சர் கூறினார்.

இருப்பினும், நிலுவையில் உள்ள நிதி கோரிக்கைகள் மற்றும் சட்டப் பொறுப்புகள் குறித்து அதிகாரிகள் தற்போது மீளாய்வு செய்து வருவதாகவும், அவர்கள் நாடு திரும்புவதற்கான குறிப்பிட்ட காலக்கெடு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்