இன்று (4) நடைபெற்ற அரசாங்க செய்தியாளர் சந்திப்பின் போது வெனிசுலாவில் அமெரிக்க இராணுவத் தலையீடு மற்றும் ஜனாதிபதி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டது குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விளக்கினார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குபதிலளித்த வெளிவிவகார அமைச்சர் சர்வதேச சட்டம் மற்றும் ஐநா சாசனத்தை மீறிய செயல் குறித்து மேலதிக நடவடிக்கைகளை விவாதிக்க ஐநா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இறையாண்மை பாதுகாப்பு: “ஐநா சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி அனைத்து நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அனைத்து ஐநா உறுப்பு நாடுகளும் இந்த கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்” என்று அமைச்சர் கூறினார்.
பாதுகாப்புச் சபை கூட்டம்: இதற்கிணங்க ஐநா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டம் நாளைக்கு (ஜனவரி 5) கூட்டப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை இலங்கை தரப்பிலிருந்தும் தாமதமின்றி முன்னெடுக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.
ஐநா பொதுச் சபை: ஐநா சாசனம் மற்றும் அதன் அடிப்படைத் தத்துவங்களை மீறுவதற்கு எதிராக ஐநா பொதுச் சபையிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனதா விமுக்தி பெரமுன அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கை குறித்துக் கேட்கப்பட்டபோது அரசியல் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வேறுபட்டவை என்றும் அவை தமக்கென சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருக்கலாம் என்றும் அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டார்
