ஆழ்கடல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வில் மாற்றம்: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்கடல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அண்மைக்கால முன்னறிவிப்புகள் தெரிவிப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.

இன்று காலை 08.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய முன்னறிவிப்பின்படி, முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் எதிர்பார்க்கப்பட்ட பலத்த மழைவீழ்ச்சியின் தாக்கம் குறைந்துள்ளது.

தற்போதைய ஆலோசனையின்படி, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வானிலை மாற்றங்களை தாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேவைக்கேற்ப வழிகாட்டல்களை வழங்குவதாகவும் NBRO மேலும் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சமீபத்திய வானிலை அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு