பெப்ரவரி 9, 2026 | பிற்பகல் 12:31
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலத்தை’ (Protection of Occupants Draft Bill) மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த முன்மொழியப்பட்ட சட்டமூலம் தொடர்பாகக் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, பெப்ரவரி 3-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு மாத கால அவகாசத்தை நீதி அமைச்சர் வழங்கியிருப்பதாகவும் அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்தது
