தித்வா சூறாவளியினால் மீன்பிடித் துறையில் ஏற்பட்ட தாக்கம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு

தித்வா சூறாவளியினால் மீன்பிடித் துறையில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில்  பாராளுமன்றத்தில் கூடியபோது இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இதில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், இலங்கை தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகாரசபை, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் உள்ளிட்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இங்கு அந்தந்த நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அதிகாரிகளுடன் தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட தாக்கம் குறித்து விரிவாகக் கலந்துரையாடிய குழுவின் தலைவர், இது தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கைகளைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு பரிந்துரைத்தார். மேலும், அந்தந்த நிறுவனங்களின் எதிர்காலச் செயற்பாட்டுத் திட்டங்களுக்கு அமைய இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் நட்டஈடு வழங்கும் விதம் குறித்தும் இங்கு குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்ட விதம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு