ஈரானிய மகளிர் கால்பந்து அணியின் மேலும் 3 வீராங்கனைகள் தாயகம் திரும்ப முடிவு; ஆஸ்திரேலியாவில் புகலிடம் பெற மறுப்பு

ஈரானிய மகளிர் கால்பந்து அணியின் மேலும் 3 வீராங்கனைகள் தாயகம் திரும்ப முடிவு; ஆஸ்திரேலியாவில் புகலிடம் பெற மறுப்பு

ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு அகதி விசாக்களைப் பெற்ற ஈரானிய மகளிர் கால்பந்து அணியின் மேலும் மூன்று வீராங்கனைகள், மீண்டும் தங்கள் தாயகத்திற்குத் திரும்ப முடிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்க அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதன் மூலம், ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய ஆரம்பகால ஏழு வீராங்கனைகளில், தற்போது மூவர் மட்டுமே அங்கு தங்கியுள்ளனர்.

“நேற்றிரவு, ஈரானிய மகளிர் கால்பந்து அணியின் மூன்று உறுப்பினர்கள், ஈரானுக்குத் திரும்பும் ஏனைய அணியினருடன் சேர முடிவு செய்தனர்,” என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“வீராங்கனைகள் இந்த முடிவை ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகு, அவர்கள் அங்கு தங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து மீண்டும் ஆலோசிக்க பலமுறை அவகாசம் வழங்கப்பட்டது,” என்றும் பர்க் மேலும் கூறினார்.

மத்திய கிழக்கில் பிப்ரவரி 28 அன்று போர் தொடங்குவதற்கு முன்னதாக, கடந்த மாதம் ஆசியக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக ஈரான் அணி ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

pottala
"என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை" – கோட்டாபயவுக்கு போத்தல ஜயந்த பதில்
muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்