எமது மாகாணத்திலுள்ள சிகை அலங்கரிப்பாளர்களும் தொழில்வாண்மை மிகுந்தவர்களாக தற்போதைய யுகத்துக்கு ஏற்றவர்களாக மாறவேண்டும்-ஆளுநர்

எமது மாகாணத்திலுள்ள சிகை அலங்கரிப்பாளர்களும் தொழில்வாண்மை மிகுந்தவர்களாக தற்போதைய யுகத்துக்கு ஏற்றவர்களாக மாறவேண்டும். தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை (NAITA) அதனைச் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது. அதனைப் பயன்படுத்தி தேசிய தொழில்முறை தகுதிச் சான்றிதழை (NVQ) எல்லோரும் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பொதுக்கூட்டம் தந்தைசெல்வா அரங்கில்  செவ்வாய்க்கிழமை காலை (07.10.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
நான் ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் இரண்டு தடவைகள் உங்கள் சங்கத்தினர் என்னை வந்து சந்தித்திருந்தார்கள். சங்க அங்கத்தவர்களிடையே கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்கள். குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் தொடர்பில் இறுக்கமான – ஒழுக்கமான நடைமுறை தேவை என அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். ஒழுங்குமுறைகள் – கட்டுப்பாடுகளை பலர் விரும்புவதில்லை. ஆனால் உங்கள் சங்கம் அதனைத் தேடி வந்து நடைமுறைப்படுத்துமாறு கோரியது பாராட்டுக்குரியது. அதேபோல உங்கள் சங்கம் மற்றும் சமாசம் எடுக்கின்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்கவேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்கள் சில நிபந்தனைகளுடனேயே உங்களின் தொழில் நிலையங்களுக்கான அனுமதிகளை வழங்குகின்றன. அவை உங்களால் மீறப்படுகின்றபோது தொழில் நிலையங்களை மூடுவதற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரங்கள் உள்ளன. எனவே ஒழுங்குமுறைக்கு உட்பட்டு செயலாற்ற வேண்டும்.

உங்கள் எல்லோருக்கும் சமூகப்பொறுப்பு இருக்கவேண்டும். எமது சமூகம் தொடர்பான கரிசனையுடன் பணியாற்றவேண்டும். நீங்கள் சங்கமாக – சமாசமாக ஒற்றுமையுடன் இருக்கும்போதுதான் எளிதில் சாதிக்க முடியும். எதிர்காலத்தில் சிறப்பான தொழில்வாண்மையுள்ளவர்களாக நீங்கள் மிளிர்வதற்கு வாழ்த்துகின்றேன், என்றார்.
இந்த நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும், சங்கத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளரும் கலந்து கொண்டு தொழில்வழிகாட்டல் அறிவுரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்