டிரம்ப்பின் ‘இயேசு மருத்துவர்’ புகைப்படம் மற்றும் பரிசுத்த பாப்பரசருடனான உடனான மோதல் குறித்து கத்தோலிக்கரான ஜே.டி. வான்ஸ் கருத்து

சில சந்தர்ப்பங்களில் ‘வத்திக்கான் தனது ஒழுக்கநெறி சார்ந்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துவது சிறந்தது’ என்று  துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார்.

ஓவன் ஸ்காட் (Owen Scott) புதன் 15 ஏப்ரல் 2026, 06:26 BST

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிர்ந்த ஒரு பதிவில், அவர் இயேசுவைப் போல உடையணிந்து காணப்பட்ட புகைப்படம் ஒரு “நகைச்சுவை” என்று துணை ஜனாதிபதி ஜே.டி.  வான்ஸ் தெரிவித்துள்ளார். தற்போது அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

வெள்ளை நிற அங்கிகளை அணிந்து, ஒரு நோயாளி மீது ஒளிரும் கையை வைத்திருக்கும் டிரம்ப்பின் அந்தப் புகைப்படம் பரவலாகக் கண்டிக்கப்பட்டது. ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பாப்பரசரைகடுமையாக விமர்சித்த சிறிது நேரத்திலேயே டிரம்ப் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், பாப்பரசர்குற்றங்கள் குறித்து “பலவீனமாக” இருப்பதாகவும், ஈரானுடனான அமெரிக்காவின் போர் குறித்து பாப்பரசர் முன்வைத்த விமர்சனங்களைத் தான் ஏற்கவில்லை என்றும் டிரம்ப் சாடியுள்ளார்.

2019-இல் கத்தோலிக்க மதத்திற்கு மாறிய வான்ஸ், திங்களன்று ஃபாக்ஸ் நியூஸின் (Fox News) ‘பிரெட் பேயருடன் சிறப்பு அறிக்கை’ நிகழ்ச்சியில் பேசுகையில், ஜனாதிபதியின் அந்த பதிவை ஒரு நகைச்சுவை என்றார்

“நிச்சயமாக, அந்தச் சூழலில் பலர் தனது நகைச்சுவையைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்ததால் அவர் அதை நீக்கிவிட்டார். ஜனாதிபதி சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளைக் கலந்து வெளியிட விரும்புவார்,” என்று அவர் கூறினார். மேலும், டிரம்ப் வெளிப்படையாகவும் (unfiltered) எந்த ஒளிவுமறைவின்றியும் இருப்பது நல்லது என்றும் வேன்ஸ் சேர்த்துக் கொண்டார்.

“வத்திக்கான் அதன் ஒழுக்கநெறி சார்ந்த விஷயங்களிலும், கத்தோலிக்க திருச்சபையில் என்ன நடக்கிறது என்பதிலும் மட்டும் கவனம் செலுத்துவது சிறந்தது என்று நான் நினைக்கிறேன். அமெரிக்காவின் பொதுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதை அமெரிக்க ஜனாதிபதிடம் விட்டுவிட வேண்டும்,” என்று  கூறினார்.

போப் “தீவிர இடதுசாரிகளுக்கு (Radical Left) ஆதரவாகச் செயல்படுகிறார்” என்ற டிரம்ப்பின் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, நாட்டின் குடியேற்றக் கொள்கையைத் தீர்மானிக்க டிரம்ப்பிற்கு உரிமை உண்டு என்றும், அவர் அமெரிக்காவின் நலன்களைக் கவனிக்க வேண்டும் என்றும் வேன்ஸ் பதிலளித்தார்.

சமூக ஊடகங்களில் விமர்சனங்கள்

வான்ஸின் இந்தக் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகின. பத்திரிகையாளர் ஜான் ஹார்வுட் எக்ஸ் (X) தளத்தில் கூறுகையில், டிரம்ப் நிர்வாகத்திற்கு “ஒழுக்கநெறி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் இல்லை” என்று சாடினார்.

அரசியல் வர்ணனையாளர் ஜான் ஃபேவ்ரூ, “போர் தொடுப்பது ஒரு ஒழுக்கநெறி சார்ந்த விஷயம் இல்லை என்று துணை அதிபர் தெளிவுபடுத்தியதில் மகிழ்ச்சி,” என்று கிண்டலாகப் பதிவிட்டார்.

எழுத்தாளர் பாலி சாய், கத்தோலிக்க மதத்திற்கு மாறியது குறித்து வேன்ஸ் எழுதி வரும் சுயசரிதையை விமர்சித்தார். “தனது புத்தகத்தின் அட்டையிலேயே மெத்தடிஸ்ட் தேவாலயத்திற்கும் கத்தோலிக்க தேவாலயத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஒரு போலி கத்தோலிக்கர் இப்படித்தான் பேசுவார்,” என்று அவர் பதிவிட்டார்.

மோதலின் பின்னணி

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவிற்கு முன்னதாக அவரைச் சந்தித்த கடைசி உலகத் தலைவர்களில் வான்ஸும் ஒருவர். தனது நிர்வாகத்தின் நாடுகடத்தல் கொள்கைகளை நியாயப்படுத்த வான்ஸ் ‘ஆர்டோ அமோரிஸ்’ (ordo amoris) என்ற இறையியல் கோட்பாட்டைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அதற்குத் தனது சொந்த விளக்கத்தை ஒரு பகிரங்கக் கடிதத்தில் அளித்திருந்தார்.

ஈரானுடனான போரில் “ஒரு முழு நாகரிகமே அழியும்” என்ற டிரம்ப்பின் கூற்று “ஏற்க முடியாதது” என்று தற்போதைய பாப்பரசர் ஒரு வாரத்திற்கு முன்பு கூறியிருந்தார். அதைத் தொடர்ந்தே டிரம்ப் அவரைச் சாடிப் பதிவிட்டார்.

பாப்பரசர் லியோவின் சகோதரரைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தான் 2024-இல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் போப் வத்திக்கானிலேயே இருந்திருக்க மாட்டார் என்றும் டிரம்ப் ட்ரூத் சோஷியலில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவைத் தொடர்ந்து, டிரம்ப் தன்னை ஒரு புனிதரைப் போலச் சித்தரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தார். அந்தப் படத்தில் நோயாளி படுக்கையைச் சுற்றி ஒரு செவிலியர், ஒரு ராணுவ வீரர், சீருடை அணிந்த ஒருவர் மற்றும் பிரார்த்தனை செய்யும் ஒரு பெண் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மேலே ஒரு பெரிய அமெரிக்கக் கொடி, இரண்டு கழுகுகள் மற்றும் மூன்று ராணுவ விமானங்கள் பறப்பது போன்றும் அந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shira11
சீனா அரசாங்கத்திடமிருந்து நன்கொடையாக கிடைத்த எம். ஆர். ஐ ஸ்கேனர் இயந்திரம் சிராந்தியின் பிள்ளையின் பிறந்த நாளன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது – நீதிமன்றில் தகவல்
Nalinda Jayatissa Cabinet Meet-790605
சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமாரின் காவியுடை விவகாரம் - சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானிக்க முடியாது என்கின்றார் நளிந்த
shira1
சிராந்தியின் உடல்நிலை- அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பது என்ன?
Navi Pillay York University (5)
நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம்
police11
வினோத உடைப் போட்டியில்செம்மணியில் புதையுண்ட சிறுவனாக தோன்றிய மாணவன் - பெற்றோர் பொலிஸ் விசாரணைக்காக அழைப்பு
sajith 5
பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை - இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் - சஜித்
imf4
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி – சர்வதேச நாணயநிதியத்தின் எதிர்வுகூறல் என்ன?
psta no1
இன்று மதியம் 1.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக – அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை கிழித்தெறி
shiranthi are
சிராந்திக்கு இதயசத்திரசிகிச்சையா? உடனடியாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
anura may 26
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவதா அல்லது புதிய திட்டத்தில் இணைவதா? அனுர தெரிவித்திருப்பது என்ன?