டோயோட்டா லங்கா (Toyota Lanka) ஆஃப்டர்-சேல்ஸ் (After Sales) சேவையில் ஒரு புதிய யுகத்தை உருவாக்குகிறது; பாரம்பரிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது

டோயோட்டா லங்கா நிறுவனம், சிறந்து விளங்குதல், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் நலன் ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்பு மூலம் இலங்கையில் மோட்டார் வாகன உரிமையாளர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து வடிவமைத்து வருகின்றது. எவ்வாறாயினும், எங்களது கதை ஒருபோதும் வாகனங்களால் மட்டுமே வரையறுக்கப்பட்டதில்லை. அவற்றை ஓட்டும் மனிதர்கள், அவற்றை நம்பியிருக்கும் குடும்பங்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாக வாடிக்கையாளர்களை இந்த பிராண்டோடு இணைத்துள்ள ‘நம்பிக்கை’ ஆகியவற்றால் தான் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முன்னோக்கிய அடியும் உலகளாவிய தரநிலைகள், நம்பகமான நிபுணத்துவம் மற்றும் கூடுதல் வசதிகளை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு சேர்ப்பதற்கான எங்களது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

மத்திய மாகாணத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் முறையை மறுவரையறை செய்து, கண்டியில் எங்களது ஆஃப்டர்-சேல்ஸ் (விற்பனைக்குப் பின்னரான) சேவை திறனை கணிசமாக மேம்படுத்திய பெருமையைத் டோயோட்டா லங்கா பெற்றுள்ளது. இது டோயோட்டா லங்காவின் நாடு தழுவிய நெட்வொர்க்கின் திட்டமிடப்பட்ட பரந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். விற்பனை (Sales), சேவை (Service) மற்றும் உதிரிப்பாகங்கள் (Spare Parts) ஆகிய மூன்றையும் ஒரே ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் அனுபவத்தின் கீழ் கொண்டு வரும் மூலோபாய ரீதியாக அமைக்கப்பட்ட “3S” வசதிகள் மூலம் இலங்கை முழுவதும் எங்களது தடம் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நம்பகமான ஆதரவு வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாக அமைகிறது.

டோயோட்டா லங்காவின் நெட்வொர்க் தற்போது நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட கிளைகளாக வளர்ந்துள்ளது, இது வாகனத் துறையில் மிக லட்சியமான நெட்வொர்க் விரிவாக்க முயற்சிகளில் ஒன்றாகும். 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது தடத்தை 30 க்கும் மேற்பட்ட கிளைகளாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள டோயோட்டா லங்கா, உலகத்தரம் வாய்ந்த டோயோட்டா தரநிலைகளை வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்ப்பதை சீராக உறுதி செய்கிறது. இதன் மூலம் அவர்கள் எங்கு பயணித்தாலும் அதிக அணுகல், வசதி, நம்பகமான வாகன உரிமையாளர் அனுபவம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது.

டோயோட்டா லங்காவின் பலத்தின் மையத்தில் ஒரு உலகளாவிய தரநிலை உள்ளது, அது வெறுமனே ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் நடைமுறையில் வாழப்படுவதுமாகும். எங்களது ஆஃப்டர்-சேல்ஸ் செயல்பாடுகள் டோயோட்டாவின் சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்ட பொறியியல் அமைப்புகள், மேம்பட்ட கண்டறியும் தொழில்நுட்பங்கள் (advanced diagnostic technologies) மற்றும் உயர் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஹைப்ரிட் அமைப்பின் துல்லியமான குறைபாடுகளைக் கண்டறிவது முதல், பிரத்யேக கருவிகள் மற்றும் உண்மையான உதிரிப்பாகங்களின் (Genuine Parts) உத்தரவாதம் வரை, ஒவ்வொரு வாகனமும் மிகுந்த ஒழுங்குடனும் கவனத்துடனும் கையாளப்படுகிறது. இந்த அர்ப்பணிப்பு காரணமாகவே டோயோட்டா மோட்டார் கார்ப்பரேஷனின் ‘வாடிக்கையாளர் மகிழ்ச்சி மிகச்சிறந்த விருதை’ (Customer Delight Excellence Award) 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளிலும் வெல்ல முடிந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு வெறும் பராமரிப்பை மட்டும் வழங்காமல், அவர்களின் ஒவ்வொரு பயணத்திலும் நீடித்த நம்பிக்கையை உறுதி செய்கிறது.

இருப்பினும், தொழில்நுட்பம் மட்டுமே டோயோட்டா லங்காவை வரையறுப்பதில்லை. எங்களை உண்மையிலேயே தனித்துவமாக்குவது வாடிக்கையாளருக்கு முதலிடம் வழங்கும் எங்களின் ஆழமாக வேரூன்றிய சிந்தனை முறையே ஆகும். ஒவ்வொரு தொடர்புகளும் வெளிப்படைத்தன்மை, கவனிப்பு மற்றும் நீண்ட கால பொறுப்புணர்வு ஆகியவற்றால் வழிநடத்தப்படுகின்றன. அது வழக்கமான சேவையாக இருந்தாலும் அல்லது சிக்கலான தொழில்நுட்ப ஆதரவாக இருந்தாலும் எங்களது அர்ப்பணிப்பு மாறாதது: எல்.எம்.டி பிராண்ட்ஸ் ஆண்டு விருதுகளில் (LMD Brands Annual) இலங்கையின் இலக்கம் 1 தயாரிப்பு பிராண்டாகவும், எல்.எம்.டி ரீடர்ஸ் சாய்ஸ் விருதுகள் 2026 இல் (LMD Readers’ Choice Awards 2026) ‘மிகவும் விரும்பப்படும் பிராண்ட்’ ஆகவும், மற்றும் மிகச் சமீபத்தில் நாட்டின் ‘இலக்கம் 1 மிகவும் விரும்பப்படும் ஆட்டோமொபைல் பிராண்ட்’ ஆகவும் டோயோட்டா அங்கீகாரம் பெற உதவிய அந்த சிறந்த வாகன உரிமையாளர் அனுபவத்தை தொடர்ந்து வழங்குவதே எங்களின் நோக்கமாகும்.

இந்த அர்ப்பணிப்பிற்கு ஆதரவாக டோயோட்டா லங்கா ஆட்டோ அகாடமி (Toyota Lanka Auto Academy) திகழ்கிறது, இது இலங்கையில் வாகனத் துறை நிபுணத்துவத்தின் எதிர்காலத்தை தொடர்ந்து வடிவமைத்து வருகிறது. கட்டமைக்கப்பட்ட பயிற்சி, நடைமுறை தொழில்நுட்ப அனுபவம் மற்றும் உலகளாவிய ரீதியில் சீரமைக்கப்பட்ட கற்றல் கட்டமைப்புகள் ஆகியவற்றின் மூலம் எங்களது ஊழியர்கள் வாகனத் துறை கண்டுபிடிப்புகளுடன் இணைந்து வளர்வதை இந்த அகாடமி உறுதி செய்கிறது. இது வெறும் பயிற்சி களம் மட்டுமல்ல; திறமையும் நோக்கமும் ஒன்றிணையும் இடமாகும், அத்துடன் பிராண்டின் உலகளாவிய நற்பெயரைக் காப்பதற்காக டோயோட்டா நிபுணர்களின் அடுத்த தலைமுறை இங்கு வளர்க்கப்படுகிறது.

இலங்கையில் எங்களது பயணம் பல தசாப்தங்களைக் கடந்தது, இது சீரான தன்மை, பின்னடைவை எதிர்கொள்ளும் திறன் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது. எங்களது ஆரம்பக்காலம் முதல் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட டோயோட்டா வாகன விநியோகஸ்தராக மாறுவது வரை, எங்கள் மீது நம்பிக்கை வைத்த தலைமுறை தலைமுறையான வாடிக்கையாளர்களுடன் இணைந்து நாங்கள் வளர்ந்துள்ளோம். அந்த நம்பிக்கை சும்மா கிடைத்துவிடுவதில்லை; அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் கவனிப்பு மூலம் அது ஒவ்வொரு நாளும் சம்பாதிக்கப்படுகிறது.

எனவே, கண்டியில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆஃப்டர்-சேல்ஸ் சேவைத் திறன் என்பது ஒரு செயல்பாட்டு மைல்கல் என்பதை விட மேலானது. இது நாம் யார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு செயலாகும். விசுவாசம் (Loyalty), நேர்மை (Integrity), நியாயம் (Fairness) மற்றும் நெறிமுறைகள் (Ethics) ஆகியவற்றைக் குறிக்கும் “டோயோட்டா லைஃப்” (Toyota LIFE) தத்துவத்தால் வழிநடத்தப்படும் டோயோட்டா லங்கா, தனது மதிப்புகளை அதன் செயல்பாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் தொடர்ந்து புகுத்தி வருகிறது. ஒரு வழிகாட்டும் கொள்கைக்கும் மேலாக, டோயோட்டா லைஃப் என்பது நாம் எவ்வாறு சேவை செய்கிறோம், எவ்வாறு வளர்கிறோம் மற்றும் நமது வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகங்களுடன் எவ்வாறு உறுதியாக நிற்கிறோம் என்பதை வரையறுக்கிறது. இது ஒவ்வொரு வாடிக்கையாளர் தொடர்புகளிலும் செல்வாக்கு செலுத்துவதுடன், இலங்கையில் டோயோட்டா அனுபவத்தின் மையமாக நம்பிக்கை, மரியாதை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை நீடிப்பதை உறுதி செய்கிறது.

ஏனெனில் டோயோட்டா லங்காவில், நாங்கள் பராமரிக்கும் ஒவ்வொரு வாகனமும் வெறும் பொறியியல் நுட்பத்தை மட்டும் சுமந்து செல்வதில்லை. அது நினைவுகளையும், குடும்பங்களையும் மற்றும் நாங்கள் பாதுகாப்பதில் பெருமிதம் கொள்ளும் பயணங்களையும் சுமந்து செல்கிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்