2025/2026 வருமான வரித் தாக்கல்களுக்கான மின்-சேவை இணையதளத்தை ஆரம்பித்தது உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான (Year of Assessment) வருமான வரித் தாக்கல்களைப் (Income Tax Returns) பதிவு செய்வதற்கான மின்-சேவை தளம் (e-service platform) தற்பொழுது திறந்துவிடப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.

திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொது அறிவித்தலின்படி, வரி செலுத்துவோர் தங்களது வரித் தாக்கல்களைப் பல பிரிவுகளின் கீழ் இணையவழியாகச் சமர்ப்பிக்க முடியும். இதில் நிறுவன வருமான வரி (CIT), கூட்டாண்மை வருமான வரி (PIT), தனிநபர் வருமான வரி (IIT) மற்றும் எளிமையாக்கப்பட்ட தனிநபர் வருமான வரித் தாக்கல் (IIT Simplified Return) ஆகிய பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த மதிப்பீட்டு ஆண்டுக்கான அனைத்து வருமான வரித் தாக்கல்களும் 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மின்-சேவை தளம் ஊடாக இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வித அசௌகரியங்களையும் தவிர்த்துக் கொள்வதற்கும், சட்டரீதியான தேவைகளுக்கு இணங்குவதற்கும் ஏதுவாக வரி செலுத்துவோர் தங்களது வரித் தாக்கல்களைக் காலதாமதமின்றி உரிய நேரத்தில் சமர்ப்பிப்பதை உறுதி செய்யுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், வரி தாக்கல் செய்யும் நடைமுறைகள் குறித்த இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, தங்களது உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “வரிகள் – சிறந்ததொரு எதிர்காலத்திற்காக” (Taxes – For a Better Future) என்ற திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு