நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு – பசுமை ஆற்றல் தீவுகளாக மேம்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

நெடுந்தீவு (Delft), அனலைதீவு (Analaitivu) மற்றும் நயினாதீவு (Nainativu) ஆகிய தீவுகளைப் ‘பசுமை ஆற்றல் தீவுகளாக’ (Green Energy Islands) அபிவிருத்தி செய்வதிலும் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துமாறு மின்சக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கலப்பு புதுப்பிக்கத்தக்க சக்தி அமைப்பு (Hybrid Renewable Energy System – HRES) திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த பின்னரே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மின்சக்தி அமைச்சுக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் (Budget) ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற ஆய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான முன்கூட்டிய கலந்துரையாடல் ஆகியன இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றன.

இக்கலந்துரையாடலின் போது, 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் மின்சக்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், இவ்வருடத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான நிதித் தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், பொருளாதார நெருக்கடி காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் (JICA) நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட எரிசக்தி திட்டங்களை மீண்டும் தொடங்குவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

“2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இத்திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், தற்போது நடைபெற்று வரும் மற்றும் வரவிருக்கும் பல முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி ஆய்வு செய்தார். இதில் கெரவலப்பிட்டியவிலிருந்து கொழும்பு துறைமுகம் வரையிலான இரண்டாவது 220 kV நிலத்தடி மின் கடத்து கேபிள் அமைப்பு, சம்பூர்-கப்பல்துறை மின் கடத்து அபிவிருத்தி திட்டம், புதிய ஹபரணை-கப்பல்துறை மின் கடத்து அபிவிருத்தி திட்டம் (CEATP), படுகா 220 kV மின் விநியோக நிலையத்தில் (GSS) STATCOM அமைப்பை நிறுவுதல் மற்றும் கூரை சூரிய மின்சக்தி ஒருங்கிணைப்பு மற்றும் விர்ச்சுவல் நெட் மீட்டரிங் திட்டம் (Rooftop Solar Power Integration and Virtual Net Metering Project) ஆகியன உள்ளடங்கும்” என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

பெட்ரோலியத் துறையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 14 முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நிதித் தேவைகள் குறித்தும் ஜனாதிபதி ஆய்வு செய்தார். கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு வளாகத்தில் ஆறு புதிய சேமிப்பு தொட்டிகளை அமைத்தல், முத்துராஜவெல எரிபொருள் சேமிப்பு வளாகத்தில் இரண்டு புதிய சேமிப்பு தொட்டிகளை அமைத்தல் மற்றும் எரிபொருள் சேமிப்பு வசதிகளை விரிவாக்குதல், கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு வளாகத்தில் உள்ள சேமிப்பு தொட்டிகளை புனரமைத்தல் மற்றும் கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு வளாகத்தின் வலயம் 07 இல் எரிபொருள் நிரப்பும் வசதிகளை மேம்படுத்துதல் ஆகியன இத்திட்டங்களில் அடங்கும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல