நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம்-ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை கைது செய்தது டெல்லி பொலிஸ்

இந்திய மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர், நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியப் பிரதமரின் இல்லத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இன்று (21) டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

May be an image of one or more people and crowd

 

பிரதமரின் இல்லத்திற்கு அருகிலுள்ள போராட்ட இடத்தைக் காலி செய்யத் தொடங்கிய பொலிஸார், பல எதிர்க்கட்சித் தலைவர்களைத் தடுத்து நிறுத்தி, அப்பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றி கைது செய்தனர். இந்த நடவடிக்கையின் போது பிரியங்கா காந்தி வத்ரா பொலிஸ் பேருந்திற்குள் தள்ளிச் செல்லப்பட்டார்.

May be an image of one or more people

 

பொலிஸாரின் இந்நடவடிக்கையின் போது சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசின் அணுகுமுறையைக் கேள்வி எழுப்பிய யாதவ், “மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்க வேண்டியது பிரதமரின் பொறுப்பாகும். அவர்களின் கோரிக்கைகளை அவர் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்?” என்று வினவினார்.

பொலிஸ் காவலில் கொண்டு செல்லப்பட்ட போது பேசிய பிரியங்கா காந்தி வத்ரா, “அவர்கள் கோழைகள். அவர்கள் பயப்படுகிறார்கள். நாங்கள் அவர்களுக்குப் பயப்படவில்லை. அவர்கள் தான் நமக்கு பயப்படுகிறார்கள்” என்று கூறினார்.

இக்கைது நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், இந்நடவடிக்கை “துரதிர்ஷ்டவசமானது” என்று குறிப்பிட்டதுடன், எதிர்க்கட்சிகள் மாணவர்களின் நலனுக்காகவே போராடி வருவதாகத் தெரிவித்தார்.

“நாங்கள் அனைவரும் நாட்டின் மாணவர்களின் நலனுக்காகப் போராடி வருகிறோம். எங்களுக்கு நீதி வேண்டும். இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்… 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு உள்ளனர். கைது செய்யப்படுவதற்கு யாரும் பயப்படவில்லை… நீதி கிடைக்கும் வரை இந்த இயக்கம் தொடரும்,” என்று அவர் கூறினார்.

May be an image of one or more people

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shira11
சீனா அரசாங்கத்திடமிருந்து நன்கொடையாக கிடைத்த எம். ஆர். ஐ ஸ்கேனர் இயந்திரம் சிராந்தியின் பிள்ளையின் பிறந்த நாளன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது – நீதிமன்றில் தகவல்
Nalinda Jayatissa Cabinet Meet-790605
சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமாரின் காவியுடை விவகாரம் - சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானிக்க முடியாது என்கின்றார் நளிந்த
shira1
சிராந்தியின் உடல்நிலை- அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பது என்ன?
Navi Pillay York University (5)
நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம்
police11
வினோத உடைப் போட்டியில்செம்மணியில் புதையுண்ட சிறுவனாக தோன்றிய மாணவன் - பெற்றோர் பொலிஸ் விசாரணைக்காக அழைப்பு
sajith 5
பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை - இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் - சஜித்
imf4
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி – சர்வதேச நாணயநிதியத்தின் எதிர்வுகூறல் என்ன?
psta no1
இன்று மதியம் 1.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக – அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை கிழித்தெறி
shiranthi are
சிராந்திக்கு இதயசத்திரசிகிச்சையா? உடனடியாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
anura may 26
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவதா அல்லது புதிய திட்டத்தில் இணைவதா? அனுர தெரிவித்திருப்பது என்ன?