பேமிலி சவாரி’ வெற்றியாளர்களை மலேசியச் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றது செலின்கோ லைஃப்

செலின்கோ லைஃப் (Ceylinco Life) தனது காப்புறுதிதாரர்களில் (Policyholders) மற்றொரு குழுவினருக்கு மறக்க முடியாத வெளிநாட்டு அனுபவத்தை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் 19 ஆவது ‘பேமிலி சவாரி’ (Family Savari) மெகா விளம்பரத் திட்டத்தின் கீழ் 10 குடும்பங்களுக்கு மலேசியாவிற்கு அனைத்துச் செலவுகளும் ஏற்கப்பட்ட சுற்றுப்பயணத்தை வழங்கியுள்ளது.

வெற்றி பெற்ற குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 40 பங்கேற்பாளர்கள், பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவருக்குமே ஒரு மறக்க முடியாத கூட்டு அனுபவத்தை உருவாக்கும் வகையில், சின்னச் சின்ன இடங்கள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்குகளை உள்ளடக்கிய கவனமாக திட்டமிடப்பட்ட பயணத்திட்டத்தின் மூலம் உபசரிக்கப்பட்டனர்.

இந்தப் பயணம் கோலாலம்பூரின் விரிவான ஆய்வை உள்ளடக்கியதாக அமைந்ததோடு, மலேசியாவின் தலைநகரை வெற்றியாளர்களுக்கு வண்ணமயமாக அறிமுகப்படுத்தியது. உலகப் புகழ்பெற்ற ‘பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள்’ (Petronas Twin Towers) மற்றும் ‘அக்வாரியா கே.எல்.சி.சி’ (Aquaria KLCC) ஆகியவற்றிற்கான விஜயங்கள் மற்றும் ‘கே.எல்.சி.சி லேக் சிம்பொனி’யில் (KLCC Lake Symphony) கழித்த ஒரு மாலைப் பொழுது ஆகியவை இதன் சிறப்பம்சங்களில் அடங்கும். அங்கு இக்குழுவினர் இசையமைக்கப்பட்ட கண்கவர் நீர் ஊற்று அமைப்பைக் கண்டு களித்தனர்.

உற்சாகத்தையும் சாகசத்தையும் சேர்க்கும் வகையில், இக்குடும்பங்கள் புகழ்பெற்ற ‘கெந்திங் ஹைலேண்ட்ஸ்’ (Genting Highlands) பகுதிக்குக் கேபிள் கார் (Cable car) மூலம் இயற்கை எழிலார்ந்த பயணத்தை மேற்கொண்டு, அப்பாந்தியத்தின் முதன்மைப் பொழுதுபோக்கு மையங்களில் ஒன்றான ‘கெந்திங் ஸ்கைவேர்ல்ட்ஸ் தீம் பார்க்’கில் (Genting SkyWorlds Theme Park) ஒரு முழு நாளப் பொழுதைக் கழித்தனர்.

இச்சுற்றுப்பயணம் முழுவதிலும் செலின்கோ லைஃபின் ‘பேமிலி சவாரி’ பிராண்ட் தூதர்களான ரொஷான், குஷ்லானி மற்றும் மின்னெத் ரணவன ஆகியோர் குழுவினருடன் இணைந்து பயணித்ததுடன், குடும்பங்களுடன் அன்பாகப் பழகி, பயணத்தின் கொண்டாட்ட மனநிலையை மேலும் அதிகரித்தனர்.

இச்சுற்றுப்பயணத்தின் அனைத்துச் செலவுகளையும் செலின்கோ லைஃப் ஏற்ற்றுக்கொண்டது. இது சாதாரண நன்மைகளுக்கும் அப்பால் அர்த்தமுள்ள மற்றும் மறக்க முடியாத அனுபவங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் விசுவாசத்திற்குப் பலனளிப்பதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்