யூதகுடியேற்றவாசிகளின் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க ஊடகவியலாளர் – பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வாறு காப்பாற்றினார்கள்

கார்டியன்

மேற்குகரையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் தாக்கப்பட்ட வோசிங்டன் போஸ்டின் ஊடகவியலாளர் பாலஸ்தீன இளைஞர்கள் தன்னை எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பதை விபரித்துள்ளார்.
ரமல்லாவிற்கு வடக்கே உள்ள அபுபலா பாலஸ்தீன கிராமத்தில் ஒலிவ் அறுவடை இடம்பெற்றுக்கொண்டிருந்ததை வோசிங்டன்போஸ்ட் ஊடகவியலாளர் ஹெய்டி லெவெய்னும் ஏனைய மேற்குலக ஊடகவியலாளர்களும் பதிவு செய்துகொண்டிருந்தவேளை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஹெய்டியை நிலத்தில் தள்ளிவிழுத்தி மோசமாக தாக்கினார்கள்.
அவருக்கு ஏற்பட்ட காயங்கள் கத்தியால் ஏற்பட்டனவா அல்லது ஏனைய ஆயுதங்களால் அவர் தாக்கப்பட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை.
என்னை தாக்கியவர்கள் பயன்படுத்திய மரகட்டைகளில் நீண்ட ஆணிகளை பார்த்தேன் என அவர் குறிப்பிட்டார்.
64 வயதான லெவின் பல போர்முனைகளில் ஊடகவியல் பணியாற்றியவர்.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலிற்கு முன்னர்தான் அவர் உக்ரைனில் ஊடகப்பணியை முடித்துக்கொண்டு திரும்பியிருந்தார்.
பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்காவிட்டால் யூதகுடியேற்றவாசிகள் என்னை கொலை செய்திருப்பார்கள் என்றார் அவர்.

American photojournalist recounts Israeli settler attack in the occupied West Bank – video

தலையில் தாக்கினால் ஒருவரை கொலை செய்ய அதிக நேரம எடுக்காது என குறிப்பிட்ட அவர் இஸ்ரேலிய நகரில் உள்ள மருத்துவமனையிலிருந்து தனது தங்குமிடத்திற்கு திரும்பியுள்ளார்.
பாலஸ்தீனிய கிராமத்தில்ஒலிவ் அறுவடை அமைதியாக இடம்பெற்றுக்கொண்டிருந்தது திடீரென முகக்கவசம் அணிந்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அருகில் உள்ள சிறிய குன்றின் மேல் தோன்றினார்கள்,எங்களை கண்காணித்தார்கள் இஸ்ரேலிய இராணுவம் அந்த இடத்திற்கு வந்த பின்னரே குடியேற்றவாசிகள் தாக்கத் தொடங்கினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இடம் நரகமாக மாறியது பாலஸ்தீன விவசாயிகள் தங்கள் அறுவடைகளுடன் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள்,அதன் பின்னர் துப்பாக்கி சத்தத்தை கேட்டேன்,அதன் பின்னர் கண்ணீர்புகை பிரயோகத்தை பார்த்தேன் பெரும் குழப்பமாகயிருந்தது திடீரென அவர்கள் என்னை துரத்த ஆரம்பித்தார்கள் என வோசிங்டன்போஸ்ட் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

நான் எனது முகத்தை நிலத்தில் மறைத்துக்கொண்டேன், எனது முகம் தாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அப்படி செய்தேனா அல்லது தாக்கப்பட்டதால் அப்படி செய்தேனா ஆனால் நான் அவ்வாறு செய்யாவிட்டால் எனது முகம் மோசமாக தாக்கப்பட்டிருக்கும்.யூதகுடியேற்றவாசிகள் என்னை காலால் உதைத்து தடியால் தாக்க தொடங்கினார்கள்,என அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனியர்கள் யூதகுடியேற்றவாசிகளை நோக்கி கவண்களை பயன்படுத்தி தாக்கிய பின்னரே குடியேற்றவாசிகள் அங்கிருந்து விலகிச்சென்றார்கள் அதன் பின்னர் அமெரிக்க பத்திரிகையாளர் ஜஸ்பெர் நதானியல் என்பவர் லெவனை நோக்கி சென்றார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனிய இளைஞர்கள் தங்கள் உயிரை பணயம்வைத்து யூதகுடியேற்றவாசிகள் அருகில் வராமல் அரண்போல செயற்பட்டனர்,அது பெரும் ஆச்சரியமாகயிருந்தது அதுவிவிலியக்கால போர்போல காணப்பட்டது என லெவின் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

856462064_2307616259779678_1274027215756073571_n
 தாயகம் திரும்புவோர் அமைப்பு தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை
sara
உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்த இராணுவபுலனாய்வாளர்- நீதிமன்றில் தகவல்
police111
இலங்கை அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தை விட கொடூரமான சட்டம்"- இலங்கை மனித உரிமை ஆணைக்குழு
Douglas-Devananda-682x375-1
டக்ளஸ்தேவானந்தாவே ஆசாத்சாலியை பிள்ளையானிற்கு அறிமுகப்படுத்தினார் – நீதிமன்றில் பிரதிசொலிசிட்டர் ஜெனரல்
easter bomb
உயிர்த்தஞாயிறுதாக்குதல்-தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்து விசாரணைகள்
PUBUDU_J
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தின் கீழ் சட்டவிரோத இரண்டாம் திருமணமும் குற்றம்? முன்னிலை சோசலிஷ கட்சி
Shanakiyan-Rasamanickam
சத்துருக்கொண்டான் படுகொலைக்கு 37 ஆண்டுகளாகியும் நீதி இல்லை! குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரியை ஏன் விசாரிக்கவில்லை?சாணக்கியன்
gaje ipkf
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேசநீதி கிடைப்பதற்கு இந்தியா இடையூறாகயிருக்ககூடாது -கஜேந்திரன்
Gotabaya Rajapakasa
கோட்டாபயவின் வெளிநாட்டு பயண அனுமதி மனு- நிராகரித்தது நீதிமன்றம்
IPKF Jaffna Hospital1
1987 ஒக்டோபர் 21ம் திகதி யாழ் மருத்துவமனையில் ------------