அனோஜனை சந்தித்தார் இலங்கை தூதுவர்

சவுதிஅரேபியாவிற்கான இலங்கை தூதுவர் ஓஎல் அமீர் அஜ்வாத் தமாம் மத்திய சிறைக்கு சென்று அனோஜன் சிவராஜாவை பார்வையிட்டுள்ளார்.
எதிர்வரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாக அனோஜனிற்கு தூதரக மற்றும் சட்ட உதவிகள் கிடைக்கின்றதா என்பது குறித்து தூதுவர் அனோஜனிடம் கேட்டறிந்துள்ளார்.
அனோஜனிற்கு எதிர்கொள்ளவுள்ள சட்டநடவடிக்கைகள் மற்றும் நீதித்துறை செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்துவதே இந்த உரையாடலின் நோக்கமாகயிருந்தது என தெரிவித்துள்ள சவுதிஅரேபியாவிற்கான இலங்கை தூதரகம் தூதுவர் தொடர்ந்தும் தூதரக உதவிகளை வழங்குவது நீதிமன்ற நடவடிக்கைகளின் போது உரிய சட்டஉதவிகளை வழங்குவது குறித்த தூதரகத்தின் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் உரிய நடைமுறைகளை மதிக்கவேண்டிய அதேவேளை அனைத்து உரிய உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக அனோஜனின் சட்டத்தரணிகளுக்கும் தூதரகத்திற்கும் இடையில் நெருங்கிய ஒருங்கிணைப்பு காணப்படவேண்டியதன் அவசியத்தையும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறைச்சாலைக்கான விஜயத்தின் சிறைச்சாலை அதிகாரிகளை சந்தித்த தூதுவர் தூதரகத்துடன் நெருங்கிய ஒத்துழைப்பை பேணுவதற்காகவும் அனோஜனின் நலன்களில் தொடர்ந்தும் கவனம் எடுப்பதற்காகவும் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

BASL-asks-govt
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு – பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
Namal-Rajapaksa-2 (1)
எயார்பஸ்கொள்வனவு : நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
Ananda-Wijepala
பொலிஸார் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கண்மூடித்தனமாக பயன்படுத்த முடியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
ranil 1
விவாகாரத்து விவகாரம் - 29 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது எனநீதிமன்றம் தெரிவிப்பு
patrick brown1111
பிராம்ப்டனில் மூன்றாவது முறையாக மேயர் பதவியைக் கைப்பற்றினார் பேட்ரிக் பிரவுன்
ambika-satkunanathan
இலங்கையில் பொலிஸாரின் துஸ்பிரயோகங்களுக்கு நீண்டவரலாறு உள்ளபோதிலும் அரசாங்கம் அவர்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்க முயல்கின்றது – அம்பிகா சற்குணநாதன்
trump
டிரம்பின் உத்தரவு கிடைத்தால் ஈரான் மீது உக்கிரமான பெரும் தாக்குதல்நடத்த அமெரிக்கா திட்டம்
rajkumar rajeev
இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமார் எங்கே? இலங்கை அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்!-ரஜீவ்காந்
benja 245
2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் முதல்தேர்தல்: இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப்போவது யார்?
kassapa12
பொதுமக்களை தவறாக வழிநடத்தும் விதத்தில் கருத்துக்கள் - கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக விசாரணை