அனுமதியின்றி ட்ரோன்களை இறக்குமதி செய்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார- குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்நளின்பண்டார அனுமதி ஏதுமின்றி நாட்டுக்குள் ட்ரோன்களை  இறக்குமதி செய்தது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் (CID) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் (IGP) உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சம்பந்தப்பட்ட ட்ரோன்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சும் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டாரவினால் நேற்று நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ட்ரோன்களைச் சுங்கப் பிரிவினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில் 39 ட்ரோன்களும் 16 மைக்குரோபோன்களும் அடங்குகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்  நேற்றுப் பிற்பகல் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இத்தகைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் (TRCSL) மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் இரண்டும் அவசியமாகும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தேவையான அனுமதிகளைப் பெற்றவுடன் இந்தப் பொருட்கள் விடுவிக்கப்படும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gnasaraa
ஞானசார தேரரை துறவற ஆடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் - நீதிமன்றத்தில் மனு
court-judge-hammer-gavel-696x398
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம்- சட்டமா அதிபர்
karu11
செவிமடுப்பதே நீதியான சட்டம் ஒன்றை நோக்கிய முதல் படியாகும்
srilankan air
கடுமையான நிதி நெருக்கச்சியை எதிர்கொண்டுள்ளஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
indra11
'இப்போது நான் காரில் இருக்கிறேன், அவருக்கு  எதிரே அமர்ந்துள்ளேன். அவரது சேலையில் இரத்தம், அவரது  நெஞ்சில் இரத்தம்': தனது மாமியார் இந்திரா  காந்திபடுகொலையை நினைவு கூரும் சோனியா காந்தி
Alii_sabir_1200px_02_08_2024
மக்களின் குரல்களுக்குச் செவிமடுப்பது பலவீனமல்ல; அதுவே ஜனநாயக நிர்வாகத்தின் பலமாகும்.-அலி சப்ரி
prageeth1111111111111111
பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த நீதிமன்ற விசாரணைகள் - தற்போதைய நிலை என்ன?
Suresh-Sallay
சுரேஷ் சாலே ஆசாத் மௌலானா சந்திப்பு இடம்பெற்ற ஹோட்டல் - விசாரணைகள் தீவிரம்
velan1
சோமதேவவின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்- சர்வதேச விசாரணை தேவை-17ம் திகதி செம்மணியில் போராட்டம் - வேலன்சுவாமிகள்
bec5d639-8910-46b7-8d9c-44bb88e4bce9
போலந்தின் கிராக்கோவ் நகரில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - ஐவர் பலி