சட்டவிரோத தையிட்டி விகாரையில் மத நிகழ்வுகளை அநுர அரசாங்கம் ஊக்குவிக்கிறது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையில், அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்த மத நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஊக்கமளித்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.
​திங்கட்கிழமை பாதுகாப்புப் படையினரின் பங்களிப்புடன் குறித்த விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட மத வழிபாடுகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்ட முன்வைத்தார்.
​
​வலி. வடக்கு, தையிட்டி பகுதி இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காலத்தில், பிரதேச மக்களின் அனுமதியோ அல்லது அறிவோ இன்றி இந்த விகாரை கட்டப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார். இராணுவக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு பொதுமக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியபோதே, தமது பரம்பரை காணிகளில் இத்தகைய பௌத்த மதக் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதை மக்கள் கண்டறிந்தனர்.
​
பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக, சட்டவிரோத விகாரையை அகற்றி காணிகளை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கக் கோரி தமது கட்சி கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக மக்களுடன் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
​
நாட்டின் பிற பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக் கூறி பல மதக் கட்டுமானங்கள் அகற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் மட்டும் ஏன் சட்டத்தை அரசு சரியான முறையில் நடைமுறைப்படுத்த மறுக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்.
​
தென்னிலங்கையிலிருந்து பக்தர்களை அழைத்து வந்து மாதாந்த பௌத்த மத நிகழ்வுகள் நடத்தப்படுவதாகவும், கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சிறப்பு மத நிகழ்வுகளுக்கு தற்போதைய அநுர அரசாங்கம் முழு ஆதரவையும் ஊக்குவிப்பையும் அளித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அத்துடன், மக்களின் இந்த நியாயமான காணி மீட்புப் போராட்டத்தை இனவாத அரசியல் போராட்டமாகச் சித்தரிக்க அரசாங்கம் முயல்வதாகவும் அவர் சாடினார்.
​
அநுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தனியார் காணிகள் அனைத்தும் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என வாக்குறுதி அளித் திருந்தார். ஆனால், NPP அரசாங்கம் அமைந்த பின்னரும் வலி. வடக்கில் மிகச் சொற்பமான காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன என்றும், சுமார் 2,500 ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
​
மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளைப் பயன்படுத்தி இராணுவத்தினர் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வருமானம் ஈட்டி வரும் நிலையில், உண்மையான காணி உரிமையாளர்கள் வாடகை வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் அகதிகளாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் ஆதங்கம் வெளியிட்டார்.
​
​தையிட்டி, மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலி பகுதி மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வாராந்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
​எனவே, தையிட்டி திஸ்ஸ விகாரையில் நடத்தப்படும் மத நிகழ்வுகளுக்கு ஆதரவு அளிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றி நிலங்களை அதன் பூர்வீக உரிமையாளர்களிடம் விரைவாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

1000015914-695x463
அனோஜனின் வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து சவூதி அரேபியாவுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு
anojan
அனோஜன் விடுதலை: அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவுதிதீர்மானம்
anil jayantha11
வரவு செலவுதிட்டத்தை நலன்புரித்திட்டங்கள் உதவிகள் அல்லது வரிச்சலுகைகளை அடிப்படையாக கொண்டுமாத்திரம் பொது மக்கள் மதிப்பிடக்கூடாது- பிரதிநிதியமைச்சர்
kasap
ஜனாதிபதியும் பிரதமரும் இந்தியாவின நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகின்றனர் – கஸ்ஸப்ப தேரர்
air india
கொல்கத்தா - மும்பை ஏர் இந்தியா விமானத்திற்கு விமானக் கடத்தல் அச்சுறுத்தல்; தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட விமானம்
kasapa1111
"நான் இறந்தால்"  -  கஸ்ஸப தேரர் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்
Gnanasara march (1)
பாதயாத்திரையிலிருந்து சத்தியாக்கிரகம் வரை கற்றுக்கொண்ட பாடங்களை நாம் மறந்துவிடக் கூடாது
Kasappa-Thera
அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராகப் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று துறவிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்
nanda2026
பொருளாதார வளர்ச்சிக்கு பாராளுமன்றமே பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு: அரசின் சீர்திருத்தங்களை வரவேற்றார் நிதியியல் குழுத் தலைவர் ஹர்ஷ
lectures
ஒப்பந்தங்கள் பிணைவிதிகளை மீறி வெளிநாடு சென்ற விரிவுரையாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய தொகை -3000 கோடி – கிழக்கு பல்கலைகழகம் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள்