தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் நிசாந்த ரணதுங்க கைது – அரசநிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முன்னாள் தலைவர் நிசாந்த ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டு;ள்ளார்.
அரசநிதியை தவறாக பயன்படுத்தியமை மற்றும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2020ம் ஆண்டு காலப்பகுதியில் அரசினால் வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள் அவரது பயன்பாட்டில் இருந்தபோதிலும் சட்டவிரோதமான முறையில் மற்றுமொரு ஜீப்பினை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டார் என நிசாந்த ரணதுங்கவிற்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் போது கண்டி வடக்கு பாததும்பர கூட்டுநிதிதிட்டத்திற்கான ஒப்பந்த நிதியை பயன்படுத்தியே அவர் டோயோட்டோ பிராடோ வகையை சேர்ந்த ஜீப்பினை பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.
நிசாந்த ரணதுங்க நீhவழங்கல் அதிகார சபையின் தலைவராக பணியாற்றிய காலத்தில் மேற்கொண்ட இந்த செயற்பாட்டினால் அரசிற்கும் தொடர்புடைய சபைக்கும் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

. குறித்த சொகுசு வாகனத்தைக் குத்தகைக்கு எடுத்ததற்காக மட்டுமே திட்ட நிதியிலிருந்து 12.75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் சட்டவிரோதமாகக் செலுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிதி முறைகேடானது தனிப்பட்ட ஒரு சம்பவமல்ல என்றும்இ திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்றும் ஆணைக்குழு குற்றம் சாட்டுகிறது. இந்த ஊழல் செயலுக்குச் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் நீர் வழங்கல் சபையின் முன்னாள் மேலதிகப் பொது முகாமையாளர்இ ஓய்வுபெற்ற பொது முகாமையாளர் மற்றும் தொழிலதிபர் ஒருவரும் முன்னதாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

நிஷாந்த ரணதுங்கவின் இந்தக் கைது நடவடிக்கையானதுஇ இலங்கையில் அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகச் செயற்படுத்தப்பட்டு வரும் பரந்த ஊழல் எதிர்ப்புத் திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

1000015914-695x463
அனோஜனின் வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து சவூதி அரேபியாவுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு
anojan
அனோஜன் விடுதலை: அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவுதிதீர்மானம்
anil jayantha11
வரவு செலவுதிட்டத்தை நலன்புரித்திட்டங்கள் உதவிகள் அல்லது வரிச்சலுகைகளை அடிப்படையாக கொண்டுமாத்திரம் பொது மக்கள் மதிப்பிடக்கூடாது- பிரதிநிதியமைச்சர்
kasap
ஜனாதிபதியும் பிரதமரும் இந்தியாவின நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகின்றனர் – கஸ்ஸப்ப தேரர்
air india
கொல்கத்தா - மும்பை ஏர் இந்தியா விமானத்திற்கு விமானக் கடத்தல் அச்சுறுத்தல்; தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட விமானம்
kasapa1111
"நான் இறந்தால்"  -  கஸ்ஸப தேரர் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்
Gnanasara march (1)
பாதயாத்திரையிலிருந்து சத்தியாக்கிரகம் வரை கற்றுக்கொண்ட பாடங்களை நாம் மறந்துவிடக் கூடாது
Kasappa-Thera
அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராகப் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று துறவிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்
nanda2026
பொருளாதார வளர்ச்சிக்கு பாராளுமன்றமே பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு: அரசின் சீர்திருத்தங்களை வரவேற்றார் நிதியியல் குழுத் தலைவர் ஹர்ஷ
lectures
ஒப்பந்தங்கள் பிணைவிதிகளை மீறி வெளிநாடு சென்ற விரிவுரையாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய தொகை -3000 கோடி – கிழக்கு பல்கலைகழகம் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள்