இலங்கையிலிருந்து பிரிட்டன் சென்ற இலங்கை மருத்துவர்கள் மீண்டும் நாடுதிரும்பவேண்டும் என சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் பிரிட்டனிற்கான விஜயத்தின்போது இந்த வேண்டுகோளை விடுத்ததாக அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள இலங்கை மருத்துவர்களை சந்தித்ததாகவும் அந்த சந்திப்பின்போது பல்வேறு காரணங்களிற்களாக நாட்டிலிருந்து வெளியேறிய இலங்கை மருத்துவர்களை நாட்டிற்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மருத்துவர்களிற்கு பற்றாக்குறை நிலவுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இலங்கைக்கு திரும்பிவந்தால் முன்னர் வகித்த பதவிகளில் அதே சம்பளத்துடன் நியமனம் வழங்கப்படும் என உறுதியளித்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
