இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் வெற்றிகரமான காம்பா கோலா (Campa Cola) உத்திகளை இப்போது நுகர்வோர் மின்னணு வணிகத்திலும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. புதிதாகக் கையகப்படுத்தப்பட்ட கெல்வினேட்டர் மற்றும் உரிமம் பெற்ற பிபிஎல் ) பிராண்டுகள் மூலம் சந்தையில் ஒரு பெரிய பங்கைப் பிடிக்க ரிலையன்ஸ் ரீடெய்ல் தீவிரமாக களமிறங்குகிறது.
காம்பா கோலா உத்தி என்றால் என்ன?: ரிலையன்ஸ் தனது காம்பா கோலா குளிர்பான பிராண்டை மறுமலர்ச்சி செய்தபோதுஇ கோகோ கோலா மற்றும் பெப்சிகோ போன்ற பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திய சந்தையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே உத்தியை இப்போது மின்னணு துறையிலும் பயன்படுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.
விலை நிர்ணயம் : ரிலையன்ஸ் தயாரிப்புகள் எல்ஜி அல்லது சாம்சங் ( போன்ற முன்னணி பிராண்டுகளை விட 20 முதல் 25 சதவீதம் வரை குறைவான விலையில் இருக்கும் என்று துறை நிர்வாகிகள் தெரிவித்தனர். இது அனைத்து விலைப் புள்ளிகளிலும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.
அதிக டீலர் லாபம்: டீலர்களுக்கு வழங்கப்படும் லாபம் நிறுவப்பட்ட பிராண்டுகளை விட சுமார் 8-15 சதவீத புள்ளிகள் அதிகமாக இருக்கும். இது டீலர்களை ரிலையன்ஸ் தயாரிப்புகளை விற்பனை செய்ய ஊக்குவிக்கும்.
ஒட்டுமொத்த விநியோக வலையமைப்பு ரிலையன்ஸ் ரீடெய்ல் பல பிராண்ட் மின்னணு கடைகள் பிராந்திய சில்லறை வணிகங்கள் மற்றும் மின்வணிக தளங்கள் என அனைத்திலும் இந்த பிராண்டுகளை வெளியிடும்.
சமீபத்திய தொழில்நுட்பங்கள் ஆக்ரோஷமான விலை நிர்ணயம் மற்றும் அதிக லாபம் ஆகியவை போட்டியில் வெற்றி பெறவும் நல்ல சந்தைப் பங்கைப் பெறவும் உதவும் என்று ரிலையன்ஸ் கருதுகிறது என்று கூறப்படுகிறது.
கெல்வினேட்டர் மற்றும் பிபிஎல் – புதிய வர்த்தகப் பொருட்கள்: கெல்வினேட்டர்: 2019 ஆம் ஆண்டு முதல் ஸ்வீடிஷ் உபகரண உற்பத்தியாளரான எலக்ட்ரோலக்ஸிடம் (இருந்து பிராண்ட் உரிமமாக கெல்வினேட்டர் பிராண்டை ரிலையன்ஸ் விற்பனை செய்து வந்த நிலையில்இ கடந்த காலாண்டில் அந்த பிராண்டை சுமார் ரூ.160 கோடிக்கு ரிலையன்ஸ் வாங்கியது.
பிபிஎல்: 2020 ஆம் ஆண்டில் பிபிஎல்-க்கான பிராண்ட் உரிமத்தையும் ரிலையன்ஸ் பெற்றது. இந்த இரண்டு பிராண்டுகளின் கீழ் ரிலையன்ஸ் தனது தயாரிப்பு வரம்பை விரிவுபடுத்தியுள்ளது
வெளிநாட்டு சந்தைகளையும் குறிவைக்கும் ரிலையன்ஸ்: ரிலையன்ஸ் நிறுவனம் கெல்வினேட்டர் மற்றும் பிபிஎல் பிராண்ட் தயாரிப்புகளை நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. அடுத்ததாக இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இறுதியாக ஆப்பிரிக்கா ஆகியவை உள்ளன.
.