சீசெல்ஸ் கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் கைது – மீன்பிடிப்படகு தீயிட்டு அழிப்பு – விசாரணையை கோருகின்றது இலங்கை மீனவர்கள் சங்கம்

சீஷெல்ஸ்(Seychelles) பாதுகாப்பு அதிகாரிகளால் இலங்கை மீனவர்கள் அறுவர் கைது செய்யப்பட்டமை மற்றும் ஒரு பல நாள் மீன்பிடி இழுவைப்படகு (Trawler) அழிக்கப்பட்டமை குறித்து சர்வதேச அமைப்புகளும் இலங்கை அரசாங்கமும் முறையான விசாரணையை நடத்த வேண்டும் என அகில இலங்கை பல நாள் இழுவைப்படகு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் செயலாளர் ருவான் பெர்னாண்டோ கூறுகையில், வென்னப்புவ – வெல்லமன்கரை துறைமுகத்திலிருந்து அறுவர் அடங்கிய குழுவினருடன் புறப்பட்ட இழுவைப்படகு, கடந்த டிசம்பர் 30ஆம் திகதி செஷல்ஸ் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தார். மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்தப் படகு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கமும் சர்வதேச அமைப்புகளும் முறையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“படகு கைப்பற்றப்பட்டது குறித்தோ அல்லது கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தோ செஷல்ஸ் அதிகாரிகள் இதுவரை இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே படகு அழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்த பின்னரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதேவேளை, படகிலிருந்து வெளியேறிய 10,000 லீற்றர் டீசல், எஞ்சின் ஆயில், கழிவுகள் மற்றும் ஃபைபர் (Fiber) ஆகியவற்றால் பாரிய கடல்சார் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட படகின் உரிமையாளரான மாரவிலையைச் சேர்ந்த சுசில் பெர்னாண்டோ கூறுகையில், கடந்த டிசம்பர் 24ஆம் திகதி மொரிஷியஸ் தீவுகளுக்கு அருகாமையில் இருந்த படகு, அதன் திசை மாறி செஷல்ஸ் கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

“நான் எனது ஆட்களை தற்காத்துப் பேசவில்லை. ஏதேனும் விதிமீறல்கள் நடந்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், செஷல்ஸ் அதிகாரிகள் நடுவே கடலில் வைத்து படகை தீயிட்டு அழித்திருக்கக்கூடாது. எமது படகுகள் இதற்கு முன்னரும் இந்தியா மற்றும் மாலைதீவு எல்லைகளில் சிக்கியிருக்கின்றன. அவர்கள் மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பார்களே தவிர, ஒருபோதும் படகுகளை இதுபோன்று அழித்ததில்லை. இலங்கை கடற்பரப்பில் பிடிபடும் இந்தியப் படகுகள் விடயத்திலும் இலங்கை அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்வதில்லை,” என அவர் ஆதங்கம் தெரிவித்தார்.

கடலில் வைத்து படகை எரித்ததால் ஏற்பட்ட கடல் சூழல் பாதிப்பு குறித்து சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் தனித்தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், இலங்கை அரசாங்கம் இந்த விவகாரத்தை செஷல்ஸ் அதிகாரிகளுடன் பேசி தீர்க்க வேண்டும் என்றும் செயலாளர் ருவான் பெர்னாண்டோ மேலும் வலியுறுத்தினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு