வெனிசுலா விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஏன் மௌனம்-“வெனிசுலாவைத் தொடாதே” – கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் போராட்டம்

வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று மாலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் “வெனிசுலாவைத் தொடாதே” (Don’t Touch Venezuela) என்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், வெனிசுலாவின் பிரச்சினைகளுக்கு அந்நாட்டு மக்களே தீர்வு காண வேண்டும் என்றும், அமெரிக்காவின் தலையீடுகளைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.

அமெரிக்கா – வெனிசுலா இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கை, வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்தமை ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த எதிர்ப்பு  இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது

வெனிசுலாவின் ஆட்சி மாற்றம் மற்றும் அதன் எண்ணெய் வளங்களைக் கண்காணிக்கும் நோக்கத்தை அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச ரீதியாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் வெளிநாட்டுத் தலையீடு குறித்த உலகளாவிய விவாதங்களையும் தூண்டியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு