வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று மாலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் “வெனிசுலாவைத் தொடாதே” (Don’t Touch Venezuela) என்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், வெனிசுலாவின் பிரச்சினைகளுக்கு அந்நாட்டு மக்களே தீர்வு காண வேண்டும் என்றும், அமெரிக்காவின் தலையீடுகளைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.

அமெரிக்கா – வெனிசுலா இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கை, வான்வழித் தாக்குதல்கள் மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்தமை ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த எதிர்ப்பு இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது
வெனிசுலாவின் ஆட்சி மாற்றம் மற்றும் அதன் எண்ணெய் வளங்களைக் கண்காணிக்கும் நோக்கத்தை அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச ரீதியாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் வெளிநாட்டுத் தலையீடு குறித்த உலகளாவிய விவாதங்களையும் தூண்டியுள்ளது.
