இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை உறுதியுடன் பின்பற்ற வேண்டும், சுற்றுலாத்துறை சார்ந்த உள்கட்டமைப்புகளில் தீர்க்கமான முதலீடுகளைச் செய்ய வேண்டும்-பொருளாதார நிபுணர்கள்

சீர்திருத்தங்கள் சீராக அமல்படுத்தப்படாவிட்டால் இந்த மீட்சி பலவீனமாகவே இருக்கும்

—–

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தை உறுதியுடன் பின்பற்ற வேண்டும், சுற்றுலாத்துறை சார்ந்த உள்கட்டமைப்புகளில் தீர்க்கமான முதலீடுகளைச் செய்ய வேண்டும் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான தேவையற்ற ஒழுங்குமுறை தடைகளை (Red Tape) நீக்க வேண்டும்எனபொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய பொருளாதார நிலைத்தன்மையை நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியாக மாற்ற வேண்டுமானால் இவை அவசியமாகும் என்று கொள்கை விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) மற்றும் ODI Global இணைந்து தயாரித்த ‘இலங்கையில் உருமாற்ற வளர்ச்சியைத் தக்கவைத்தல், 2025–2030’ என்ற ஆய்வறிக்கையின் வெளியீட்டு விழா கொழும்பிலுள்ள இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய ODI சிரேஷ்ட ஆய்வாளர் மற்றும் பொருளாதார ஆய்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்  கணேசன் விக்னராஜா, 2022 கடன் தவணைத் தவறுதலுக்குப் பிறகு நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், சீர்திருத்தங்கள் சீராக அமல்படுத்தப்படாவிட்டால் இந்த மீட்சி பலவீனமாகவே இருக்கும் என்று அவர் எச்சரித்தார்.

“சுற்றுலாத்துறை தற்போது எழுச்சி கண்டு வருகிறது. இந்த வேகத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் சிறந்த போக்குவரத்து இணைப்புகள், தரம் உயர்த்தப்பட்ட விமான நிலையங்கள், வளர்ந்து வரும் சுற்றுலாத் தலங்களில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் வலுவான பாதுகாப்பு மற்றும் சேவைத் தரங்கள் போன்ற இலக்கு வைக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும்,” என்று டாக்டர் விக்னராஜா கூறினார்.

சுற்றுலா முதலீடுகளை கொழும்புக்கு வெளியே, அதிக அளவில் பார்வையிடப்படாத பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது வேலைவாய்ப்புகளை உருவாக்கும், வருமானத்தைப் பரவலாக்கும் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை வலுப்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், முதலீட்டாளர்கள் நாட்டிற்குள் நுழைவது, தொழில்களை நடத்துவது மற்றும் வெளியேறுவது ஆகிய நடைமுறைகளை எளிமையாக்குவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆசியாவில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், இலங்கை ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்தத் தவறினால் பிராந்திய விநியோகச் சங்கிலிகள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) இழக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார். “அனுமதிகள் மெதுவாகவும், விதிகள் தெளிவற்றதாகவும் இருந்தால், மூலதனமும் வேலைவாய்ப்புகளும் வேறு நாடுகளுக்குச் சென்றுவிடும்,” என்று அவர் கூறினார்.

சமீபத்தில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Cyclone Ditwah) சூறாவளி போன்ற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலேயே இந்த மீட்சி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகக் குழு குறிப்பிட்டது. இந்தச் சூறாவளி சுமார் $4.1 பில்லியன் நேரடி சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 82-84% பங்களிப்பை வழங்கும் மாவட்டங்களைப் பாதித்துள்ளதுடன், தேசிய உற்பத்தியில் சுமார் 4% இழப்புக்கு சமமானதாகும்.

இத்தகைய பின்னடைவுகளுக்கு மத்தியிலும், இலங்கை IMF திட்டத்தின் பாதியில் இருப்பதாகவும், அந்நிய செலாவணி கையிருப்பை மீண்டும் கட்டியெழுப்பியுள்ளதாகவும், 2022 பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.

இந்த ஆய்வறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள கொள்கை நிகழ்ச்சி நிரலானது வெறும் நெருக்கடி மேலாண்மை பற்றியது மட்டுமல்ல, அது பொருளாதார ஸ்திரதன்மையை உறுதிப்படுத்தி, எதிர்கால வளர்ச்சிக்கான பொருளாதாரத்தை தயார்படுத்துவதாகும் என்று நிபுணர்கள் வலியுறுத்தினர்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் யவெட் பெர்னாண்டோ பேசுகையில், கடினமாகப் பெறப்பட்ட ஸ்திரதன்மையைப் பாதுகாக்க கொள்கை நம்பகத்தன்மை மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவை முக்கியம் என்றார். IMF ஆதரவுடனான சீர்திருத்தங்கள் பணவீக்கத்தைக் குறைக்கவும், நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உதவியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதில் மெத்தனமாக இருக்கக்கூடாது என்று எச்சரித்தார். “மேக்ரோ பொருளாதார நிலைத்தன்மையில் சமரசம் செய்யக்கூடாது. இப்போது நம்பகத்தன்மையை இழப்பது பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்,” என்றார்.

ODI Global பணிப்பாளர் டர்க் வில்லெம் டி வெல்டே கூறுகையில், பொருளாதாரஸ்திரதன்மை  மட்டுமே செழிப்பைத் தந்துவிடாது என்றார். “இலங்கை இனி ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் உயர்தர வெளிநாட்டு நேரடி முதலீடுகளை நோக்கி நகர வேண்டும்,” என்று அவர் கூறினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்