“பூநகரி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறீதரன் எம்.பி வலியுறுத்தல்…

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அண்மையில் கள விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார்.
​குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர், காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டதுடன், அங்குள்ள பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
​இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள 34 காற்றாலைகளில், சுமார் 9 காற்றாலைகள் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளிலும், செழிப்பான தென்னந்தோப்புக் காணிகளிலும் அமைக்கப்படவுள்ளன. இதனால் சுமார் 2,500க்கும் மேற்பட்ட காய்க்கும் தென்னை மரங்கள் அழிக்கப்படவுள்ளதோடு, மக்களின் வாழ்வாதாரமும் இருப்பிடமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
​”அரசினால் மேற்கொள்ளப்படும் காற்றாலைத் திட்டத்திற்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால், இத்திட்டம் எமது வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையிலும், குடியிருப்புகள் இல்லாத தரிசு நிலங்களில் மேற்கொள்ளப்படுவதையுமே நாம் விரும்புகிறோம். இந்த நிலம் எமது பூர்வீக நிலம்; எமது வாழ்வியலும் பொருளாதாரமும் இந்த மண்ணோடு பிணைந்துள்ளது. எனவே, இதற்கு மாற்றாக வேறு காணிகளையோ அல்லது நட்ட ஈட்டையோ பெறுவதற்கு நாம் தயாரில்லை” என மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
மேலும், காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்காக அடையாளப்படுத்தப்பட்ட காணி தொடர்பில் எழுந்துள்ள ஆட்சேபனைகள் குறித்து, பூநகரி பிரதேச செயலகத்தில் செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமது ஆட்சேபனைகளை நேரடி வாக்குமூலங்களாக வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
​மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்:
​”அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பூர்வீக நிலங்களையும், அவர்களின் வாழ்வாதாரமான தென்னந்தோப்புகளையும், விவசாய நிலங்களையும் அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் இத்திட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், மக்களை இடம்பெயரச் செய்தோ அல்லது அவர்களின் பொருளாதாரத்தைச் சிதைத்தோ இத்திட்டம் முன்னெடுக்கப்படக்கூடாது.
​பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், கள யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு, குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களைத் தவிர்த்து மாற்று இடங்களில் இத்திட்டத்தை முன்னெடுப்பதே, முறையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
​இந்தக் கள விஜயத்தின் போது, பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் திரு. சிவகுமார் சிறீரஞ்சன் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்