இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: இந்திய பிரதமர்பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் முதலீடு செய்​ய​வும்இ புது​மை​களை உரு​வாக்​க​வும் இதுவே சரி​யான நேரம் என்று இந்திய பிரதமர்பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.
டெல்​லி​யில் உள்ள யசோ பூமி​யில் இந்​திய மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

மேக் இன் இந்​தியா திட்​டத்​தில் மொபைல்​ போன்​கள் செமிகண்​டக்​டர் எலக்ட்​ரானிக்ஸ் உள்​ளிட் பல்​வேறு துறை​களில் வளர்ச்சி மற்​றும் சீர்​திருத்​தங்​களின் வேகத்தை அரசு துரிதப்​படுத்தி வரு​கிறது.

இந்​தி​யா​வில் முதலீடு செய்​ய​வும்இ புது​மை​யான கண்​டு​பிடிப்​பு​களை உரு​வாக்​க​வும் இதுவே சிறந்த சரி​யான நேரம். இந்​தி​யா​வின் ஜனநாயக அமைப்​பு அரசின் வரவேற்​கத்​தக்க அணுகு​முறை மற்​றும் வணி​கம் செய்​வதற்​கான எளிமை ஆகியவை முதலீட்​டாளர்​களின் நட்பு மிகுந்த நாடு என்ற பிம்​பத்தை நம்​நாடு அடைய உதவி​யுள்​ளன.

இந்​தியா கடந்த தசாப்​தத்​தில் டிஜிட்​டல் துறை​யில் மிகப்​பெரிய முன்​னேற்​றத்தை எட்​டி​யுள்​ளது. 1 ஜிபி டேட்டா ஒரு கப் தேநீரின் விலையை விட மலி​வான​தாக மாறி​யுள்​ளது.

ஒரு காலத்​தில் 2ஜி உடன் போராடிய நமது நாடு இன்று 5ஜி சேவை கிட்​டத்​தட்ட ஒவ்​வொரு மாவட்​டத்​தை​யும் சென்​றடை​யும் அளவுக்கு முன்​னேறி​யுள்​ளது. இந்​தி​யா​வில் டிஜிட்​டல் இணைப்பு என்​பது ஒவ்​வொரு இந்​தி​யரின் வாழ்​விலும் ஒருங்​கிணைந்த அங்​க​மாகும்.

நிதி​சார் மோசடி பாது​காப்​பு குவாண்​டம் தகவல் தொடர்​பு 6ஜி அலைக்​கற்றை சேவை கண்​ணாடி இழை தகவல் தொடர்​பு செமிகண்​டக்​டர் உற்​பத்தி உள்​ளிட்ட பல்​வேறு முக்​கி​யத்​து​வம் வாய்ந்த கருப்​பொருள்​களில் புத்​தொழில் நிறு​வனங்​கள் எண்​ணற்ற செயல்​திட்​டங்​களை வழங்​கி​யுள்​ளன.

மொபைல் தொலைத்​தொடர்​பு மின்​னணு​வியல் உள்​ளிட்ட ஒட்​டுமொத்த தொழில்​நுட்ப சூழலில் ஏற்​படும் சிக்​கல்​களுக்கு உலக நாடு​களுக்கு தீர்வு வழங்க இந்​தி​யா​வுக்கு சிறப்​பான வாய்ப்பு கிடைத்​துள்​ளது. இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​தார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்