கதிர்காமத்தில் உள்ள கட்டிடமொன்றிற்கும் தனக்கும் தொடர்புள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
முகநூல் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இது தொடர்பில் தான் சிஐடியினருக்கு வாக்குமூலம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
கதிர்காமத்தில் எந்த கட்டிடத்தை கட்டுவதற்கும் வைத்திருப்பதற்கும் நான் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.